உங்களுக்கு வேண்டுமா

Prayer at dawn

சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்; நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல.

எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.

 

கலாத்தியார் 1: 11,12

 

ஆண்டவர் ஒவ்வொருவரையும்  தாயின் வயிற்றில் இருந்தபோதே தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால்  அழைக்கிற கடவுள்.

 

நாம் வாழ்கிற வாழ்க்கை,  நடத்தை, செயல்பாடுகள் , பேச்சு இவற்றின் மூலம் நாம் கிறிஸ்துவை பிறருக்கு வெளிபடுத்த வேண்டும். நம் வாழ்வு பிறருக்கு கிறிஸ்துவின்  நற்செய்தியை அறிவிக்குமாறு அமைய வேண்டும். நம் அன்பு செயல்கள் கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டும். 

 

 தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, இவற்றை ஆண்டவரிடமிருந்து இலவசமாக பெற்றோம்.  நாமும் பிறருக்கு இலவசமாக  கொடுப்போம். 

 

ஜெபம் :. ஆண்டவரே நீர் எனக்கு அருளிய கொடைகளுக்கு நன்றி. எங்கள் குடும்பத்தில், வேலை ஸ்தலங்களில், நட்பு வட்டாரங்களில், இறை இல்லங்களில்,  பொது இடங்களில் , உம்மை பிரதிபலித்து எங்கள் செயல்கள் மூலம் உமது நற்செய்தியை அறிவிக்க அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 17 =

Please wait while the page is loading