இயேசுவின் இரண்டாவது இறுதி வார்த்தைகள் - லூக்கா 23:43 - நீர் என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்

இயேசுவின் இரண்டாவது இறுதி வார்த்தைகள் - லூக்கா 23:43
நீர் என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்.

நிதிபதியாக சிலுவையில் இயேசு இருப்பதுபோலக் காட்சி. இரண்டு கள்வார்களுக்கு நடுவில் இருக்கிறார். இதே காட்சி மத்தேயு நற்செய்தி 25 ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். இறுதித் தீர்ப்பின்போது நல்லவர்கள் ஒருபுறம், தீயவர்கள் ஒருபுறமாகப் பிரிக்கப்படுகின்றார்கள். அதே பார்வையில் பார்க்கின்றபோது: 

இடதுபுறம் உள்ள கள்வன் சுயநலத்தோடு அவர் மெசியாவாக தன்னை மீட்கவில்லை என்ற கோபத்தோடு இயேசுவை அனுகுகிறான். வலப்புறம் இருக்கும் கள்வன் அவரை மெசியாவாக நம்பி, அவருடைய மீட்பில் இடம் கேட்கிறான். இதுவே அவன் செபித்த முதலும் கடைசி செபமாக இருக்கலாம். ஏன் ஒரு முறை செபமாகக் கூட இருக்கலாம். ஆக, அவனுடைய செபம் உடனடியாகக் கேட்கப்பட்டது. கல்வாரியின் இரத்தம் முதலில் மீட்டது புனிதர்களையல்ல, மாறாக ஒரு கள்வனைத்தான்.

இன்றே என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் என்று சொல்கிறார். யோவான் நற்செய்தி 15 அதிகாரத்தின் பின்புலத்தில் பேரின்ப வீடு என்பது தந்தையாகிய இறைவனின் இல்லம்தான்;. அதுவும் அவன் இன்றே இருப்பதாக வாக்களிக்கின்றார். அவரை அரசராக்க முயலுகின்றபோதும் தப்பிஒடுகிறார். நீ யூதர்களின் அரசனா என்ற கேள்விகள் கேட்கும்போது மவுனம் காக்கிறார். ஆனால் கள்வன் கேட்கிறபோது உடனடியாக ஏற்றுப் பதில் கொடுக்கிறார். காரணம் அவன் தன் வாழ்வில் அவரை மெசியாவாக உணர்ந்ததால் வந்த உணர்வின் வெளிப்பாடுதான் அவனுடைய சான்று.

நீதிமொழிகளின் ஆசிரியர் பேரின்ப வீட்டினைப் பற்றிச் சொல்கின்றபோது, ஞானத்தோடு நடந்தால் நாம் பேரின்ப வீட்டிற்கு செல்வோம், மடமையோடு செயல்பட்டால் அது சிற்றின்ப வீட்டிற்குச் செல்வதாகும். ஆக, இயேசுவை மெசியாவாக ஏற்று, தம்முடைய வாழ்வியலில் அதற்கான மாற்றங்களைக் கொடுப்பதே ஞானத்தைப் பின்பற்றுவது. பேரின்ப வீட்டில் கொண்டுபோய் சேர்ப்பது. 
 

Add new comment

16 + 2 =

Please wait while the page is loading