இப்படி ஒரு வேண்டுதலா !?!

Prayer at dawn

அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.

 

யோவான் 17:15

 

இறைமகன் இயேசு நமக்காக பிதாவிடம் வேண்டுகிறார். நமக்காக பரிந்து பேசுகிறார். 

 

 அப்பா நான் உம்மில் ஒன்றாய் இருப்பது போல இவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறார்.  

 

இவர்களை உலகிலிருந்து எடுத்து விடாதீங்க.  பகைவன் இவர்களைத் தொடாதவாறு இவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்க  என்று வேண்டுகிறார் .

 

சிலுவை மரணத்தின் போது கூட பிதாவே இவர்கள் செய்வது என்ன வென்று அறியாமல் செய்கிறார்கள். இவங்களை மன்னியும் என்று மன்னிப்பு அருள வேண்டுகிறார்.

 

உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார் என்று தூய ஆவியை நமக்கு அனுப்பி தருமாறு பரிந்துரை பண்ணுகிறார்

 

அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள் என்று நம் உரிமைக்காக வேண்டுகிறார்.

 

 தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும் என்று நம்முடைய பாதுகாப்புக்காக வேண்டுகிறார்

 

அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன் என்று தன்னையே அர்பணித்து நமக்காக வேண்டுகிறார்.

 

இயேசு வேண்டியது தனக்காக அல்ல .நமக்காக.நம் பாதுகாப்புக்காக. நாம் மன்னிப்பு பெறுவதற்காக. நாம் தந்தையோடு ஒன்று படுவதற்கா க. 

 

நாமும் ஜேபிப்போ மா.

 

ஜெபம் :. ஆண்டவரே இன்று இந்த அதிகாலையில் , நீர் என்னிடம் ஒப்படைத்த குடும்பத்துக்காக, அம்மா அப்பாவிற்க்காக, சகோதர சகோதரிகளுக்காக, பிள்ளைகளுக்காக, நண்பர்களுக்காக, உற்றார் உறவினர் களுக்காக, எங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு, எங்களை வெறுத்தவர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களை ஆசீர்வதிக்க ஆண்டவரே வழி நடத்தும்.  ஆமென்

Add new comment

4 + 2 =

Please wait while the page is loading