இப்படியும் செய்யலாமோ...

Prayer at dawn

பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

 

 

மத்தேயு   : 7.12

 

 

 நாம் பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதையே பிறருக்கு செய்ய வேண்டும் என கடவுள் சொல்கிறார். தன்னை தான் அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்யவேண்டும் என்பது   ஒரு கட்டளை அல்லவா.

 

சவுல் ராஜா தாவீது ராஜாவுடைய வளர்ச்சியை பார்க்க பிடிக்காது பொறாமை கொண்டு அவரை கொல்ல வழி தேடுகிறார். இறுதியில் தோல்வி மேல் தோல்வி அடைந்து அவமானம் தாங்காமல்  தன் வாளை உருவி அதன் மீது விழுந்து சாகிறார்.  

 

தாவீது அரசரோ சவுல் ராஜாவுக்கு தீங்கு செய்ய நினைக்கவில்லை. .  ஆண்டவர் அவரை மேலும் மேலும் உயர்த்துகிறார். சென்ற இடமெல்லாம் வெற்றி பெறுகிறார்.

 

பிறர் நம்மை அன்பு செய்ய வேண்டும், மதிக்க வேண்டும்,  விசாரிக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என நாம் பிறரிடம் எதிர்பார்ப்பதை  நாம் பிறருக்கு செய்தோமென்றால் அவை அனைத்தும் நமக்கு திரும்ப கிடைக்கும். 

நாம் எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கு அளக்கப்படும் . 

 

ஜெபம் :. ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்.  பிறரையும் எங்களை போன்று   நினைத்து நாங்கள் அன்பு செய்ய வரம். நாங்கள் பலவீனர்கள். உம் பலத்தாலும் பரிசுத்ததாலும் எங்களை நிரப்பும் ஆண்டவரே ஆமென்.

Add new comment

9 + 5 =

Please wait while the page is loading