இது போதுமா?

Prayer at dawn

ஆண்டவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.

 

2 கொரிந்தியர் 12-9.

 

திருத்தூதர் பவுல் உடலில் ஒரு நலக்குறைவினால் பாடுபட்டார். அது அவருக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அப்போது அவர் ஆண்டவரே அதை அவரை விட்டு அகற்றி விடுமாறு ஆண்டவரிடம் கேட்டார். அதற்கு ஆண்டவர்  என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் என் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார் .

 

திருமுகம் பல எழுதி மக்களுக்கு இயேசுவை பற்றி அறிவித்தவர், பாவ வாழ்வை விட்டு விலகிய பிறகு இயேசுவுக்காகவே வாழ்ந்தவர் அவருக்கும் உடலில் தைத்த முள் போல் வருத்திக் கொண்டே  இருக்கும் அளவுக்கு ஒரு உடல் பலஹீனம் இருந்தது. 

 

அன்பு சகோதரமே ,  பிரச்சனை ,நோய் கடன் தொல்லைகள்  இவற்றின் மத்தியில் நாம் கடவுளை இறுக பற்றி கொண்டால் அவருடைய அருளால் நம்மை அரவணைத்து பாதுகாத்து கொள்வார். பொய் சொல்ல அவர் மனிதன் அல்ல. வாக்கு மாறாத கடவுள். . என் அருள் உனக்கு போதும் என்று இன்று ஆண்டவர் சொல்கிறார். அவருடைய அருளோடு எழுந்து  பிரகாசிப்போம்.

 

ஜெபம் : ஆண்டவரே எங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள பிரச்சனைகளால்  அமிழ்ந்து போகிறோம். எழும்ப வலு இல்லை. உம் அருளால் எங்களை நிரப்பும். புத்துயிர் பெற்று. புது பலத்தோடு செயல்பட தூய ஆவியின் ஆற்றலை தாரும். ஆமென்..

Add new comment

8 + 0 =

Please wait while the page is loading