இது கடவுள் சொத்து

Prayer at dawn

என் இல்லம் இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார்

 

மத்தேயு 21-13.“

 

 

இயேசு கோவிலுக்குள் சென்றார்; கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார்.

 

பின்பு என் வீடு இறை வேண்டலின் இல்லம் இதை கள்ளர் குகை ஆக்குகிறீர்களே என்கிறார்.

 

நாம் ஒவ்வொருவரும் இறைவன் வாழும் ஆலயம்.  தூய ஆவியின் இருப்பிடம். ஆனால் நம் உள்ளங்களில்  எத்தனை தீய எண்ணங்கள். பொறாமை,  தற்பெருமை, பொய் பித்தலாட்டம், வேசித்தனம் என எத்தனை எத்தனையோ.   ஆண்டவர் இன்று நம்மை பார்த்து கேட்கிறார். நான் குடியிருக்கும் உங்கள் உள்ளங்களை இவ்வளவு குப்பையும் கூளமுமாக வைத்து இருக்கிறீர்களே என்று.  

 

நாம் என்ன செய்ய போகிறோம். நம் உள்ளத்தை அன்பால் அலங்கரிப்போம். சமாதானத்தை அங்கு வைப்போம். பிறர் நலம் என்னும் விளக்கை ஏற்றுவோம்.  ஆண்டவர் மகிழ்வோடு குடிகொள்வார்.  

 

ஜெபம் :. ஆண்டவரே உயிருள்ள கடவுளே, உம் இல்லத்தை தகுந்த ஆயத்தத்தோடு வைக்காமல் உம்மை மனம் வருந்த செய்ததற்காக வருந்துகிறோம்.  அப்பா எங்களை மன்னியும். இனிமேல் இப்படிபட்டவற்றை செய்யாது இருக்க தூய ஆவியின் துணை தாரும். ஆமென்.

Add new comment

11 + 9 =

Please wait while the page is loading