இதன்வழியும் ஆற்றல் தருவாரா?

Prayer at dawn

என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.

யோவான் 16-33

இரவும் பகலும் மாறிமாறி வருகிறதைப்போலவே நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் , ஆபத்தும் , போராட்டமும் , தோல்விகளும் மாறி மாறி வருகின்றன.  நம்பிக்கையினால் வாழ்வு அடைவோம் . எனவே ஆண்டவரை நம்பி திடமனதோடு இருப்போம்.

 சவுல் ராஜா தாவீது ராஜாவை எப்படியாவது கொன்றுவிட வேண்டுமென்று முயற்சி செய்த போதெல்லாம் தாவீது ராஜா உயிர் தப்பித்து இருந்தார்.  ஏனென்றால் அவர் ஆண்டவர் மேல் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தார். எனவே தான் தாவீது ராஜா திருப்பாடல்களில்  "அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்"சொல்கிறார்.

நம்மில் பலர் வேலைக்காக, மகப்பேற்றுக்காக, திருமணத்திற்காக, காத்திருக்கிறோம். கவலை வேண்டாம். ஆண்டவர் பாதத்தில் வைத்து விடுங்கள் 

 சோர்ந்து போகாதேயுங்கள்.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு.   ஆண்டவர் நம்மை   ஆசீர்வதித்து உயர்த்தும் காலமும் நிச்சயமாகவே உண்டு.

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார் என்ற வார்த்தையின் படி ஆண்டவர் மிக விரைவிலேயே நம்மை ஆசீர்வதிப்பார். நம் கண்ணீரையெல்லாம் மாறிவிடும்.

ஜெபிப்போம் :. ஆண்டவரே, உம்மை கூவி அழைக்கிறேன். என் ஆபத்து நாளில் என்னோடு இரும்.  என் தேவைகளை சந்தியும். உம் பிள்ளை நான் அசிங்கப்படாதவாறு காத்தருளும்.  களைப்படையாதவாறு, சோர்வடையாதவாறு, ஓடி ஜெயிக்க தூய ஆவியின் அருளைத் தாரும். ஆமென்.

 

Add new comment

14 + 3 =

Please wait while the page is loading