இங்கு இறங்குவது அங்கு உயர்வது !?!

Prayer at dawn

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.

 

லூக்கா 19-5,6

 

சக்கேயு பெரிய பணக்காரன். அதிக வட்டி வாங்குபவன். நிச்சயமாக பணக்காரர்களுக்கு உரிய திமிரும் தலைக்கனமும் சக்கேயுகிட்டவும் இருந்தது . இயேசு அவர்கிட்ட வந்து விரைவாய் இறங்கி வாரும் என்கிறார்.  

 

இயேசுவின் வார்த்தைக்கு கீழ் படிக்கிறார். இறங்குகிறார். இயேசுவோடு செல்கிறார். இயேசு அவருடைய வீட்டுக்கு செல்கிறார். அந்த வீட்டுக்கு மீட்பு உண்டாகிறது. அவர் கீழ் படிந்து இறங்கி வந்ததால் அவருக்கும் அதன் மூலம் அவருடைய  குடும்பத்தினருக்கும் மீட்பு கிடைக்கிறது.  

 

நாமும் ஆங்கரம், பொறாமை, தலைக்கனம் ,  அகந்தை, தற்பெருமை,  போன்ற உயரங்களில் ஏறி அமர்ந்து இருக்கிறோம். ஆண்டவர் நம்மை பார்த்து விரைவாய் இறங்கி வா என்று கூப்பிடுகிறார். நாமும் கீழ்படிந்து இறங்கி சென்றால் , ஆண்டவர் உள்ளே நுழைந்து தங்குவதற்கு இடம் கொடுத்தால்,  நம் மூலம் நம் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும். 

 

ஜெபம்:. யேசுவே, ஆண்டவரே , உம்மை மகிமை படுத்துகிறோம். வீண் பெருமை , அகந்தை, ஆங்காரம் போன்ற பாவங்களை செய்து உம்மை விட்டு தூர போன நேரங்களுக்காக மனம் வருந்துகிறோம். எங்களை மன்னித்து ஏற்றுகொள்ளும்.  இனிமேல் இத்தகைய பாவங்களுக்கு அடிமை ஆகாமல் உம் பிள்ளையாக நீர் தங்கும் ஆலயமாக வாழ துணை செய்யும் ஆமென்.

Add new comment

5 + 2 =

Please wait while the page is loading