ஆண்டவருக்கு நீங்கள் யார்?

Prayer at dawn

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.

 

யோவான் 15.15

 

ஆண்டவர் நம்மை நண்பர்கள் என்கிறார்.  ஆனால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். 

 

ஆண்டவரிடம் என் கடனை தீர்த்து வைக்கணும். எனக்கு வேலை கிடைக்கணும். எனக்கு நல்ல வாழ்க்கை அமையனும்.  என் நோய் தீரணும் என்று  , இதெல்லாம் எனக்கு நீங்க செய்து தரணும் என்று கட்டளை இட்டு ஒரு பணியாளரை போன்று   ஆண்டவருக்கு வேலை கொடுக்கிறோம்.

 

ஆண்டவர் நம்மிடம் நீ  பொய் சொல்லாதே. நீ போகின்ற பாதை தவறு.  நீ செய்கின்ற செயல் தவறு என்று நம்மை திருத்தும் போது நாம் அதை ஏற்று கொண்டு திருந்த முயற்சித்தால் உண்மையிலேயே நாம் ஆண்டவரை ஒரு நண்பனை போல் நேசிக்க்கின்றோம். ஆண்டவர் நம்மை கண்டிப்பதையும் ஏற்று கொண்டு அவரிடம் நம் விருப்பங்களை எடுத்து கூற முயற்சிப்போம்.

 

ஆபிரகாம் ஆண்டவருடைய கண்டித்தலையும் ஏற்று கொண்டார். ஆசீர்வாதங்கள் கேட்டு பெற்று கொண்டார்.  

 

யாக்கோபு நூல் 2-23 கூறுகிறது.“ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார்.

 

 

ஜெபம் : ஆண்டவரே எங்கள் உமது நண்பர்களாக நினைப்பவரே உமக்கு நன்றி. உம் அன்புக்கு பதில் அன்பாக நாங்களும் உம்மை அன்பு செய்து வாழ அருள் தாரும். ஆண்டவரே பெற்று கொள்வதில் மட்டும் அல்ல உம் விருப்பப்படி நடந்து உமது கண்டிப்பை ஏற்று கொண்டு உம் நண்பர்களாக வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

2 + 7 =

Please wait while the page is loading