அன்பை வெளிப்படுத்தினால் இவ்வளவு நன்மையா !!!

Prayer at dawn

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணிவளர்.

 

 யோவான்     21:17

 

நம் ஆண்டவருக்கு மனிதர் மீது எவ்வளவு அன்பு பாத்தீங்களா?  . சீமோனிடம் மூன்றாவது முறையாக கேட்கிறார். நீ என்னை அன்பு செய்கிறாயா என்று. அவருக்கு சீமோன்,   நான் உம்மை அன்பு செய்கிறேன் என்று சொல்வதில் தான்  எத்தனை சந்தோசம் பாத்தீங்களா. அதற்கு  பரிசாக இயேசு மகிழ்ச்சியோடு என் ஆடுகளை பேணி வளர் என்று  ஒரு பெரிய பொறுப்பையே சீமோனுக்கு கொடுக்கிறார் .

 

நாமும் ஒவ்வொரு நாளும் , முடிந்தால் அடிக்கடி  யேசுவே நான் உம்மை நேசிக்கிறேன் என்று சொன்னால் ஆண்டவர் எவ்வளவு  சந்தோசப் படுவார்.  நம் அன்பை சொல்ல சொல்ல நமக்கு இன்னும்  ஆண்டவர்கிட்ட நெருக்கம் அதிகமாகும்.நாம் கூப்பிடும் போதெல்லாம் ஓடி வந்து அருகில் இருப்பார். என் பிள்ளை அதுவும் என்னை அதிகமாக நேசிக்கிற பிள்ளை என்னை கூப்பிடுதே என்று அவர் உடனிருத்தலை நமக்கு உணர்த்தி நம்மை  பலப்படுத்துவார் .  நம்மை நம்பி முக்கியமான சில பொறுப்புகளையும் தருவார். நம் கூடவே இருப்பார். அவர் கண்ணை நம்ம மேலேயே வைச்சிருப்பார்.

 

ஜெபம்:. ஆண்டவரே  நான் உம்மை நேசிக்கிறேன்.   இன்னும் அதிகமாக உம்மைநான்  நேசிக்கவும் , கோவில்களுக்கு முன்பாக செல்லும் போது உமக்கு வணக்கம் செலுத்தவும் , கூடுமானால் கோவிலுக்குள் சென்று உம்மோடு பேசவும் நல்ல மனதை தாரும். ஆண்டவரே உலக கவலைகள், ஆடம்பரங்கள், பொழுதுபோக்குகளில் அதிக நேரம் செலவழித்து உம் அன்பை இழந்து விடாமல் என்னை உம் அன்பின் கயிற்றால் கட்டிவிடும். உம் கரங்களுக்குள் வாழ அருள்  தாரும். ஆமென்.

Add new comment

12 + 5 =

Please wait while the page is loading