அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

prayer at dawn. pray with nature

இயேசு அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.
லூக்கா 19:5
  

இந்த நிகழ்ச்சியை நாம் உற்று நோக்குவோம். சக்கேயு குள்ள மனிதர். மக்கள் நெருக்கம் அதிகமான அந்த இடத்தில் அவர் இருந்ததே யாருக்கும் தெரியாது. 

மேலும் அவர் பிறரை துன்புறுத்தி வரிதண்டுபவராகக் கருதப்பட்டவர் .  யாருக்கும் அவரை பிடிக்கவில்லை. பாவி என்று குறிப்பிடுகிறார்கள்.  

ஆனால்  இயேசு , சக்கேயு தனக்கு முன்பாகவே போய், இயேசுவை எப்படியாவது பார்க்கவேண்டும் என்று மரத்தின் மேல் ஏறி அமர்ந்து யேசுவுக்காக காத்திருந்த அவருடைய மனதைப் பார்த்தார். 

அந்த சில மணி துளிகளில், தன் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தை ஒதுக்கி விட்டு, இயேசுவுக்காய் காத்திருந்த அவருடைய மனதின் ஆசையை பார்த்தார். அவனை அழைத்து அவனோடு தங்க வேண்டும் என்கிறார்.

ஆண்டவர், நாம் எப்படி இருந்தாலும் நம்மை உற்று நோக்கி கொண்டிருக்கிறார்.  நம் மனதின் வாஞ்சையை அறிந்து இருக்கிறார். 

நாம் உலக காரியங்களில் ஈடுபட்டு இருந்தாலும் சில மணித்துளிகளாவது ஆண்டவருக்காக முழு விருப்பத்துடன் அமர்ந்தால் ஆண்டவர் நம்மையும் அழைப்பார். 

நம் வீட்டிலும் விருப்பத்தோடு தங்குவார். நம் வீட்டிலும்  ஆசீர்வாதங்கள் தங்கும்.

ஜெபம் : ஆண்டவரே நானும் என் வீட்டாருமோ உம்மையே சரணாகதி என்று உம்மையே பற்றிக் கொள்ளும் நல்ல மனதை எங்களுக்கு தாரும்.  

Add new comment

12 + 7 =

Please wait while the page is loading