அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

prayer at dawn. pray with nature

ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்
யாக்கோபு 4:10

ஆண்டவருக்கு நாம் ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேண்டும். சமயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவருக்கென்று ஒரு சமயத்தை ஒதுக்க வேண்டும்.  

மரணத்தில் நாம் அவரை நினைக்க மாட்டோம். பாதாளத்தில் அவரை துதிக்க மாட்டோம். எனவே இன்றே அவரை நாடுவோம். அவரிடம் மன்றாடுவோம். அவர் செய்த நன்மைகளுக்காக நன்றி சொல்லுவோம். 

எத்தனை எத்தனை நன்மைகளைப் பெற்றுக்க்கொண்டோம். ஒவ்வொன்றாக   சொல்லி நன்றி சொல்வோம். 

நாம் செய்த பாவங் களுக்காக மன்னிப்பு கேட்போம்.  பிள்ளைகளுக்காக அவர்களுடைய சமாதானமான வாழ்வுக்காக ஜெபிப்போம்.  தூய ஆவியின் வரங்களுக்காக ஜெபிப்போம். 

நாட்டுக்காக அதன் பல்வேறு காரியங்களுக்காக ஜெபிப்போம்.  , நம் உறவுகள், நண்பர்கள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள், நோயாளிகள் இவர்களுக்காக மன்றாடுவோம். 

யோபு தன் நண்பர்களுக்காக மன்றாடிய போது கடவுள் அவருடைய துன்பத்தை மாற்றினார். நாம் பிறருக்காக  ஜெபிக்கும்போது நம் ஜெபத்தை கடவுள் கேட்பார்.ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்

ஜெபம்: ஆண்டவரே  உம்மை ஒவ்வொரு நாளும் மன்றாடி உம்மோடு இணைந்து தூய வாழ்வு வாழ அருள் தாரும்.

Add new comment

13 + 4 =

Please wait while the page is loading