அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

Prayer at dawn

நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

 

எபேசியர் 2:22

 

நாம் அனைவரும் கடவுள் வாழும் ஆலயம். தூய ஆவியார் வாசம் செய்யும்  உறைவிடம்.  நாம்  எப்பொழுதும் நம் உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் நாம் ஆவியிலே தூயவர்கள் ஆக இருக்கும்பொழுது ஆண்டவர் நம்முள் குடிகொண்டு இருப்பார்.

 

அவரே நம்மை வழிநடத்துவார் தீமைகள் வரும்போது நமக்கு உணர்த்துவார். தடைகளைத் தாண்டி செல்லவும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் ஆண்டவர்தாமே பலம் தருவார். 

 

இந்த அதிகாலையில் தூய ஆவியானவர் அவருடைய ஞானத்தை நமக்கு தந்து நம்மை வழி நடத்துவார். தூய ஆவியார் நம்மோடு இருப்பதால் நாம் தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, இவற்றை கொண்டு வாழ்வோம்.

 

அவரே நமக்கு வெயிலின் குளிர்ச்சியாகவும்,  அழுகையின் தேற்றரவாகவும்  இருக்கிறார்.  அவரே நோயிலிருந்து விடுதலை தருபவரும் , தவறிப் போனவர்களுக்கு வழிநடத்தி நல்வழி படுத்துபவருமாய் இருக்கிறார். அவரை விசுவசித்து கேட்கும் போது அவர்களுக்கு திருக்கொடைகள் ஏழையும் தருகிறார்.

 

ஜெபம்:.  தூய ஆவியே இந்த அதிகாலை வேளையில் உம் வரம் வேண்டி நிற்கிறோம்.  உம் அபிசேகத்தால் எங்களை நிரப்பும். எங்கள் வாழ்வை துய்மையானதாக மாற்றும். நாங்கள் நடக்க வேண்டிய பாதையை எங்களுக்கு காட்டும். எங்கள் மத்தியிலே அசைவாடும். அரும் புரியும் . ஆமென்

Add new comment

3 + 8 =

Please wait while the page is loading