அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

Prayer at dawn

 “இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான்.

லூக்கா 23:41

 

 நம் ஆண்டவர் சிறிய ஜெபத்தைகூட கேட்கிறார். நாம் எந்த நிலையிலிருந்து அவரை கூப்பிட்டாலும் பதில் கொடுக்கிறார். வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் எந்த நேரத்தில் அழைத்தாலும் அன்போடு விசாரிக்கிறார்.

 

 இயேசுவின் சிலுவை சாவின் போது அவரது வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கள்வர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். அதில் வலப்பக்கமிருந்த கள்வன் ஆண்டவரை பார்த்து நீர் ஆட்சியுரிமை பெறும்போது என்னை நினைவுகூரும் என்கிறான். இது ரொம்ப சின்ன ஜெபம். அந்த கள்வன் தான் செய்த தவறுக்காக தண்டனை அனுபவிக்கும்போது சொல்கிறான். அதுக்கு  என்று நேரம் ஒதுக்கலை.  நீண்ட ஜெபமும் இல்லை.

 

 இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார். உடனடியாக அந்த ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. 

 

நாமும் இந்த காலை வேளையில் கடவுளிடம் எளிய நம் விருப்பத்தை சொல்லுவோம். இன்று  இயேசு நம் தேவையை பூர்த்தி செய்வார்.  நம்  எளிய ஜெபம்  நிச்சயமாக கேட்கப்பட்டு நமக்கு ஜெயம் கிடைக்கும்.  இன்றைய நாள் ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக அமையும்.

 

கண்ணதாசனின் வரிகள்:

இதுவரை அவரை காத்தேன்

        இனி அவர்  தமையே உந்தன்

  அதிகார கைக ளுக்குள்

        அளிக்கின்றேன் அவரை நீவீர்

  சதிகாரர் வலைபடாமல் 

        தலைத்தொட்டு காத்தல் வேண்டும்

   அதிகமாய் புனிதம் செய்து 

        அவரை நீர் ஆழல் வேண்டும்

 

 

ஜெபம் :. ஆண்டவரே  உமக்கு நன்றி. எங்களோடு இருந்து எங்களை பாதுகாத்து வழிநடத்தி வருவதால் உமக்கு நன்றி. இந்த நாளின் நாங்கள் ஏறெடுக்கும் எல்லா ஜெபத்துக்கும் பதில் தருபவரே நன்றி. எங்களையும் எங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதியும் ஆமென்.

Add new comment

12 + 3 =

Please wait while the page is loading