அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

Prayer at dawn

மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.

 

யோவான் 20:18

 

அதிகாலையில் மகதலா மரியா ஆண்டவரை பார்க்க போறாங்க . நடந்தது என்ன. ஆண்டவரை பார்க்கிறாங்க. தான் பார்த்த நல்ல செய்தியை, பயந்து நடுங்கி கொண்டிருந்த சீடர்களிடம்  போய்  சொல்றாங்க. ஆண்டவரை நான் பார்த்தேன். இனிமேல் நமக்கு பயமில்லை என்று சொல்றாங்க.  

 

அந்த செய்தி கேட்ட எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. அவங்களுக்கு இனி ஆண்டவர் இயேசு நம்மோடு இருப்பார் என்ற மகிழ்ச்சி. 

 

நாமும் இந்த அதிகாலையில் ஆண்டவரை பார்ப்போம். ஆண்டவர் இயேசு நம்மோடு இருக்கிறார். அவர் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வீட்டிலுள்ள அனைவருக்கும்  , நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் அன்பின் வார்த்தைகளை சொல்லுவோம். வாழ்வளிக்கும் ஆக்கபூர்வமான வார்த்தைகளை பேசுவோம். ஆண்டவர் நம்மோடு இருப்பார். ஆவியானவர் நம் நாவில் பேசுவார்.

 

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

 

உரை:

பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

 

ஜெபம் : ஆண்டவரே இந்த அதிகாலையில் உம் பிரசன்னத்தால் எங்களை நிரப்பும். உம் அன்பை சுவைக்க அருள் தாரும். எதிர்மறை எண்ணங்களை விட்டு ஆக்கபூர்வமான பேசவும் செயல்படவும் ஆவியானவரின் அருள் தாரும். உம் சிறகுகள் கீழ் அரவணைத்து காத்தருளும்.நாள் முழுவதும் பாதுகாத்தருளும். ஆமென்

Add new comment

1 + 1 =

Please wait while the page is loading