2021 திருத்தந்தையின் ஆண்டு செபாக்கருத்துகள் தெரியுமா?

Pope Francis visits People

2020 ஆம் ஆண்டின் முதல் கால்பகுதி சென்று கொண்டிருக்கின்ற பொழுதே

2021 ஆம் ஆண்டிற்கான மாதாந்திர ஜெப கருத்துகளை திருத்தந்தை வெளியிட்டிருக்கிறார்.

2021ம் ஆண்டில், நற்செய்தி அறிவிப்பு அல்லது, உலகளாவிய ஒரு கருத்துக்காகச் செபிக்க அழைக்கும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

2021ம் ஆண்டு

சனவரி மாதத்தில் மனித உடன்பிறந்த நிலைக்காகச் செபிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தில், வன்முறையை எதிர்நோக்கும் பெண்களுக்காகச் செபிக்குமாறு கூறியுள்ளார். 

மார்ச் மாதத்தில், கடவுளின் எல்லையில்லா இரக்கத்தைச் சுவைப்பதற்கென, ஒப்புரவு அருளடையாளத்தை வாழுமாறும் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில், சர்வாதிகாரப் போக்குகள், ஏன் சனநாயகம் நெருக்கடியிலுள்ள இடங்களில்கூட, அடிப்படை உரிமைகளுக்காக, தங்கள் வாழ்வு அச்சுறுத்தப்படுவதை எதிர்கொள்ளும் மக்களுக்காகச் செபிப்போம் என கூறியுள்ளார்.

மே மாதத்தில் நிதி உலகிற்காக செபிக்குமாறு கூறியுள்ளார். 

ஜூன் மாதத்தில் திருமணத்தின் அழகு போற்றப்படும்படியாக செபிக்குமாறு கூறியுள்ளார். 

ஜூலை மாதத்தில் சமுதாய நட்புக்காக செபிக்குமாறு கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தில் திருஅவைக்காக செபிக்குமாறு கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் சூழலியல் உணர்வுள்ள ஒரு வாழ்வு அமைக்கப்படும்படியாக செபிக்குமாறு கூறியுள்ளார்.

அக்டோபர் மாதத்தில் தூதுரை மறைப்பணியாளர்களுக்காக செபிக்குமாறு கூறியுள்ளார்.

நவம்பர் மாதத்தில் மனத்தளர்ச்சியால் துன்புறுவோர்க்காக செபிக்குமாறு கூறியுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் மறைக்கல்வி ஆசிரியர்களுக்காக செபிக்குமாறு கூறியுள்ளார்.

செபத்தின் திருத்தூதுப் பணி என்ற பெயரில், இயேசு சபையினர் நடத்திவரும் ஓர் அமைப்பு, ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை, விசுவாசிகளுடன் பகிர்ந்துகொள்ளும் செபக்கருத்துக்களை,  வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறது. 

Add new comment

2 + 17 =

Please wait while the page is loading