மறதி நோயினால் துன்பப்படுவோருக்காகச் செபிப்போம்

அல்சைமனர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டு துன்புறுவோறுடன் நம் உடனிருப்பினைக் காட்டும் உலக நாள் செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடைபெறும் கொடுமைகள், அவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள், வன்முறைகள் மேலும் அவர்களின் மாண்புகள் போற்றாத வண்ணம் நடந்துகொள்ளும் செயல்கள் போன்றவற்றிலிருந்து அவர்களைக் காப்பதற்கு நாம் போதிய முயற்சியும், அவர்களுக்காக சிறப்பாக வேண்டவும் திருத்தந்தை அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்கள்.

நாம் இவற்றை எவ்வாறு செய்யலாம்:

  • நம்மிடைய மறதி நோயால் பாதிக்கப்பட்டு துன்புறுபவர்களுக்கு குறைந்தது 5 நிமிடமாவது செபிப்பது,
  • செபமாலை ஒப்புக்கொடுப்பது,
  • அவர்களை சென்று சந்திப்பது,
  • உதவியின்றி தவிப்பவர்களுக்கு உதவிசெய்வது,
  • வழிகாட்டுதல் இன்றி இருப்பவர்கள் சரியான விதத்தில் வழிகாட்டுவது.

Add new comment

5 + 1 =

Please wait while the page is loading