பங்களதேஸில் திருத்தந்தை பிரான்சிஸ்

https://www.youtube.com/watch?v=t-gptfn1L3E

பங்களதேஸில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மியான்மாரிலிருந்து பங்கதேஸிற்கு பயணமானார்கள். நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை தன்னுடைய திருத்தூதுப் பயணத்தை அங்கு மேற்கொண்டார்கள். 

எல்லாருக்கும் பொதுவாக திருப்பலி நிறைவேற்றினார். பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்றார். நாட்டின் முதன்மைக் குடிமகனையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்தார். அவருடைய இந்த திருத்தூதுப் பயணத்தின் நோக்கம் அமைதியும், ஒற்றுமையும். 

பங்களதேஸ் ஒரு இஸ்லாமிய நாடு. அங்குள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று அரை இலட்சம் ஆகும். கருதினால் ரொசாரியோ இப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, இவ்வாறு கூறுகிறார்: 

திருத்தந்தை அவர்கள் அவருடைய அன்பு, கனிவிரக்கம், திறந்த மனப்பாங்கு, கலாச்சாரம், மதங்களைப் பற்றிய பண்முகப் பார்வையால் கிறிஸ்துவின் பிரசன்னத்தை இங்கு கொண்டுவந்தார்கள். இது பங்களதேஸ் மக்களை மிகவும் ஆழமாகத் தொட்டது. மக்கள் அனைவரும், குறிப்பாக கிறிஸ்தவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் திருத்தந்தையை நேரடியாக தொட்டு பார்த்து உரையாட முடிந்தது.
 

Add new comment

1 + 2 =

Please wait while the page is loading