சிறப்பு நற்செய்தி அறிவிப்பு மாதச் செபம்

நற்செய்தி அறிவிப்பு மாதத்திற்கான
               சிறப்புச் செபம்

விண்ணகத் தந்தையே, இறைவா/
உம் ஒரே பேறான திருமகன் / எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
இறந்து உயிர்தெழுந்தபின் /
“நீங்கள் போய், எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்று /
தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார். /
நாங்கள் பெற்ற திருமுழுக்கின் வழியாக /
திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பங்காளர்களாகிறோம் என்பதை /
எங்களுக்கு நினைவூட்டுகின்றீர். /
நற்செய்திக்குச் சான்று பகர்வதற்காக /
நாங்கள் துணிவும் ஆர்வமும் கொண்டு விளங்குமாறு /
தூய ஆவியாரின் கொடைகளால் எங்களை வலுப்பத்தியருளும். /
இதனால் /
திரு அவையிடம் ஒப்படைக்கப்பட்டு /
இன்னும் முழுமை பெறாத இந்நற்செய்திப் அறிவிப்புப்பணி /
உலகிற்கு வாழ்வும் ஒளியும் கொணரும் வண்ணம்  /
புதிய பயனுள்ள முறைகளில் ஆற்றப்படுவதாக. /
எல்லா மக்களும் /
இயேசு கிறிஸ்துவின் மீட்பளிக்கும் அன்பையும் / இரக்கத்தையும் /
உய்ர்த்துணர்வதற்கு /
நாங்கள் கருவிகளாக விளங்கிட அருள்வீராக. /
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் /
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற /
அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம் / ஆமென்.

 

Add new comment

3 + 6 =

Please wait while the page is loading