ஆசியாவை நோக்கிய மீண்டும் ஒரு திருத்தூதுப் பயணம்..

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
ஆசியாவை நோக்கிய மீண்டும் ஒரு
திருத்தூதுப் பயணம்..

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இதயத்திற்கு இதமான வார்த்தை என்னவென்றால் விளிம்பு நிலை. 

இது வெறும் வார்த்தையல்ல, அவருடைய செயல்களின் அடிப்படையில் உருவாகிய அவருடைய எண்ண ஒட்டங்களின் தொகுப்புதான் இந்த வார்த்தை விளிம்பு நிலை. இந்த வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை அவருடைய திருத்தூதுப் பயணங்களிலும், அவர் நியமிக்கும் பணிநியமங்களிலும் நாம் பார்க்கிறோம். 

விளிம்பு நிலையை நோக்கிய அழமான அக்கறை கொண்ட அகில உலக கத்தோலிக்க திருஅவையை வழிநடத்தும் ஒரு ஆயன், ஆசிய திருஅவையின்மீது மீண்டும் தன் கண்களைப் பதிய வைத்துள்ளார்.

திருத்தந்தை அவர்கள் தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாடுகளை வருகின்ற நவம்பர் மாதம் சந்திக்கிறார். தாய்லாந்து நாடு திருத்தந்தை அவர்களின் ஆசியப் பயணத்தின் ஆறாவது நாடாகவும், ஜப்பான் அவருடைய ஏழாவது நாடாகவும் இருக்கிறது. 

திருத்தந்தை அவர்களின் திருத்தூதுப் பயணம் ஆசிய திருஅவைக்கு ஆசிராகவும், குறிப்பாக தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாட்டில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டவர்களும் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாக அமைய செபிப்போம்.
 

Add new comment

8 + 1 =

Please wait while the page is loading