வாகனம் ஓட்டுபவர்களுக்கான புதிய சட்டம்....

வாகனம் ஓட்டுபவர்களுக்கான புதிய சட்டம் சில மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் அது மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்னும் கருத்தை ஆழமாக பதிவுசெய்துள்ளனர். இதனால் அந்த சட்டத்தை நிறைவேற்ற மறுத்துள்ளனர். சில மாநிலங்கள் அந்த சட்டம் இன்னும் அதிமான இலஞ்சம் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறியுள்ளனர். சில மாநிலங்கள் அதைப் பற்றி தெளிவான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை.

நமது மாநிலத்தில் அதை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அனைவரும் தலைக்கவசம் அணியும் நிலை உருவாகியுள்ளது. ஓட்டுனர் உரிமம், வாகனக் காப்பீடு, அதிவேகமாக ஓட்டுதல் போன்றவைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதை தவறாக பயன்படுத்தி இலஞ்சம் பெறும் நிலை உருவானால் என்ன செய்வது என்பதுதான் கேள்வி!

உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள்...

Add new comment

5 + 0 =

Please wait while the page is loading