மும்பையில் நடைபாலம் இடிந்து 5 பேர் பலி

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகேயுள்ள நடைமேம்பாலம் திடீரென இடிந்து விழுந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்த விபத்தில் 5 போ் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 34 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு அருகே சாலையை கடப்பதற்காக நடைமேம்பாலம் உள்ளது.

 

மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்த இரவு 7.35 மணியளவில் அந்த நடைமேம்பாலத்தில் இருந்த காண்கிரீட் தளம் திடீரென இடிந்து சாலையில் விழுந்தது.

 

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினரும், காவல் துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

Add new comment

2 + 13 =

Please wait while the page is loading