பணிவாழ்வில் பல்லாண்டு வாழ செபிப்போம்

பணிவாழ்வில் பல்லாண்டு வாழ செபிப்போம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தமது 83 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்கள். 1936 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி திருத்தந்தை அவர்கள் அர்செண்டினா நாட்டில் பிறந்தார்கள்.

இயேசு சபைத் துறவியாக பணியாற்றி, சபையின் மாநிலத் தலைவராகவும், பேராயராகவும், கருதினாலாகவும் பணியாற்றியபின்பு, அகில உலக கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்ந்தெடுத்தப் பெயருக்கு ஏற்ப “பிரான்சிஸ்” தன் வாழ்வுமுறையை அமைத்துள்ளார்.

இவரின் இதயத்தைக் கொள்ளைக் கொண்டவர்கள் ஏழைகள், அனாதைகள், தெருவில் வாழ்பவர்கள், அகதிகள், புலம்பெயர்ந்தவர்கள், சிறைக்கைதிகள், முதியவர்கள், நோயாளிகள், இளையோர் என இந்த வரிசைப் பட்டியில் நீண்டுகொண்டே செல்கிறது.

இவரின் சிறப்பு என்னவென்றால், இவர் நம்பிக்கையிழந்தவரின் நம்பிக்கை ஒளி, இளையோரின் வழிகாட்டி, இயேசுவின் உண்மைச் சீடன். இவர் பணிவாழ்வில் பல்லாண்டு வாழ இவரை வாழ்த்துங்கள் செபியுங்கள்.

நீங்களும் அவரின் சிறப்பை பதிவிட விரும்பினால், இந்த பக்கத்தில் பதிவிடுங்கள். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
 

Add new comment

11 + 3 =

Please wait while the page is loading