பணமதிப்பு நீக்கம்: கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் இரண்டு ஆண்டு நிறைவு

இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் கொண்டு வந்து நவம்பர் 8ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ளது.

 

இந்த நாளை கறுப்பு தினமாக காங்கிரஸ் கட்சியினர் அனுசரித்து வருகின்றனர்,

 

கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணிக்கு இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆற்றிய வானொலி உரையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.

 

இதனால் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. தங்களின் பணத்தை எடுப்பதற்கு வங்கி முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். பலர் இறந்தனர்.

 

கறுப்பு பணத்தை வெளிகொணருவதற்காக இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், நாட்டில் புழக்கத்திலுள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் சற்று குறைவாக எல்லாம் வங்கிக்கு வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருப்பதால், இது முற்றிலும் தோல்வியடைந்த நடவடிக்கை என அனைவருக்கும் தெரிய வந்து்ள்ளது.

 

இந்திய தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் தலைமையமைச்சர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

Add new comment

8 + 6 =

Please wait while the page is loading