பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

தீபாவளி அன்று அதிகாலை 4 முதல் 5 மணி வரையும் இரவு 9 முதல் 10 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

பண்டிகை நாட்களில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதால், காற்று மாசடைவதோடு, பொதுமக்களுக்கு பல்வேறு உடல்நலப் உபாதைகள் ஏற்படுகின்றன.

 

எனவே, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணயைில் உச்சநீதிமன்றம் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என முதலில் தீர்ப்பு வழங்கியது.

 

பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. .

 

ஆனால், பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டுமென  கோரி, தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் இந்தியாவில், ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு பகுதி மக்களும் வெவ்வேறான பாரம்பரியம், கலாசாரம், நம்பிக்கை கொண்டு விளங்குகிறார்கள்.

 

தீபாவளி பண்டிகை வடமாநிலங்களில் இரவிலும்,  தமிழ்நாட்டில் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் விடியற்காலையிலும் கொண்டாடப்படுகிறது.

 

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அதிகாலை 4.30 முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாட அனுமதிக்க கோரப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணையில் மேற்கண்ட உத்தரவு வழங்கப்பட்டு்ள்ளது.  

 

தீபாவளியன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விதிகள் பின்பற்றப்படுவதை ஆட்சியர் தொடங்கி கிராம நிர்வாக அதிகாரி வரை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிப்பது என்பது பற்றி தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Add new comment

5 + 13 =

Please wait while the page is loading