தெய்வநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்ற அசியா பீபி விடுதலை

தெய்வநிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்றிருந்த அசியா பீபி என்ற பெண்ணை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

 

8 ஆண்டுகள் தனிமை சிறையில் கடும் தண்டனை அனுபவித்த அசியா பீபி மத சுதந்திரதிற்கான மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தினால் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் அளித்த தீர்ப்பை வரவேற்றுள்ள, அசியா பீபியின் வழங்கறிஞர் சாய்புல் முலுக், இந்த பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

வழக்கின் பின்னணி

 

கிறிஸ்தவரான ஆசியா தனது சக பணியாளர்களுக்கு தண்ணீர் கொடுத்தபோது, கிறிஸ்தவரிடமிருந்து தண்ணீர் வாங்க அவர்கள் மறுத்து விட்டதுடன், அசியாவை முஸ்லிம் மதத்திற்கு மாறவும்  வற்புறுத்தியுள்ளனர்.

 

இதனால், அசியா பீபி அவர்களுடன் வாக்குவாதம் செய்ததால், அவர் முஸ்லிம்களின் இறைவாக்கினர் முகமது நபியை அவமானப்படுத்திவிட்டதாக தெய்வநிந்தனை குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

 

நீதிமன்றம் அவருக்கு  மரணத் தண்டனை விதித்தது, இந்த தீர்ப்பை எதிர்த்ததோடு, பல உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன.

 

இந்த வழக்கில் அசியா பீபி தரப்பு தொடுத்த மேற்முறையீட்டில்  தற்போத அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

நீதிபதிகளுக்கு மிரட்டல்

 

அசியாவுக்கு விடுதலை தீர்ப்பு வழங்கிய  நீதிபதிகளை கொன்றுவிட வேண்டும் என்று பாகிஸ்தானின் தெரிக் இ லபைக் கட்சி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

 

2011 ஆம் ஆண்டு அசியா பீபியை விடுதலை செய்ய குரல் கொடுத்த லாகூர் ஆளுநர் சமான் தசீரை கொலைச் செய்த அவரது மெய்காப்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்த கட்சி தொடக்கப்பட்டது.

 

ஆனால், சல்மான் ஹசீரை கொலை செய்த மெய்காப்பாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது

 

போராட்டம்

 

இந்நிலையில் கடும்போக்கு முஸ்லிம்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

தீவிர உணர்வுடைய மதபற்றாளர்கள் அசியா பீபிக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

 

வெளிநாட்டுக்கு அனுப்ப ஆலோசனை

 

பாகிஸ்தான் முழுவதும் நடைபெற்று வருகின்ற போராட்டம் காரணமாக, அசியா பீபிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 

எனவே, மேற்குலக நாடுகளில், அவர் சென்றுவிட வேண்டும் என்று அவருக்காக வாதாடிய வழங்கறிஞர் சாய்புல் முலுக் கருத்து தெரிவித்துள்ளார்.

Add new comment

2 + 0 =

Please wait while the page is loading