தக்காளி வைரஸ்- பீதியில் பிரான்ஸ்

Tomatoes at a dish

தக்காளி வைரஸ்- பீதியில் பிரான்ஸ்

“tomato brown rugose fruit virus” or ToBRFV என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தாவர வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

பிரான்சின் உணவு மற்றும் சுகாதார ஏஜென்சி சமீபத்தில் எச்சரித்தாதவாது.   மருந்தே இல்லாத வைரஸ் தொற்று ஒன்று பிரான்சை நெருங்கி வருகிறது, தக்காளி மிளகாய் போன்ற தாவர உற்பத்தி மற்றும் வியாபாரம் பெரும் அபாயத்தில் இருப்பதாக கூறி இருக்கிறது.

இந்த வைரஸால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் தாவரங்களுக்கு இடையே வெகு விரைவில் அது பரவக்கூடியது, வைரஸ் பாதித்த தாவரங்கள் வேர் முதல் நுனி வரை பாதிக்கப்படும் என்பதால் அவற்றை வேருடன் பிடுங்கி அழிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

இந்நிலையில் வேளாண்மை அமைச்சகம் பிரான்சின் வடமேற்கில்  ஒரு பகுதியில் இந்த வைரஸ் நுழைந்து விட்டது எனவும் பாதிக்கப்பட்ட பண்ணை தனிமைப்படுத்தப்பட்டு அங்கிருந்த மொத்த தக்காளி பழங்களும் அழிக்கப்பட்டுள்ளது என வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Add new comment

1 + 6 =

Please wait while the page is loading