கொரோனா- வியட்நாமில், பங்களாதேஷில்

corona virus

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

வியட்நாமில்

இந்த உலகம் கொரோனா தொற்றுக்கிருமியால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த இக்கட்டான நேரத்தில், கிறிஸ்தவர்கள், இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் மீது கிறிஸ்தவ அன்பைக் காட்டுமாறும் வலியுறுத்தியுள்ளார்,  வியட்நாமின் Ha Tinh ஆயர் Paul Nguyen Thai Hop அவர்கள்.

கொரோனா நோய்க் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கு உதவும், வாயை மூடும் கவசம் அதிகம் தேவைப்படுகின்றது என்றும், இக்கவசங்கள் அதிக விலையில் விற்கப்படும் சூழலில், கத்தோலிக்கர், இவற்றை விற்பதில் இலாபம் தேட வேண்டாம் என்றும், ஆயர் Paul Nguyen அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 

மனித சமுதாயம் இத்தகைய இக்கட்டான சூழல்களில், ஒருவர் ஒருவரை அன்புகூரவும், தாராள மனதுடன் செயல்படவும் வேண்டுமென்று செபிப்போம் எனவும், பேராயர் Joseph Nguyen Nang அவர்கள்  ucan செய்திக்கு கூறியுள்ளார்.

பங்களாதேஷில் 

 39 வயதான பங்களாதேசை சேர்ந்த நபர் சிங்கப்பூரில் நோய் தொற்றுக்கு ஆளாகி இருந்ததை அறிந்த பின்பு,

சீனா wuhan  மாகாணத்தில் இருந்து திரும்பிய 8 பயணிகளும் பங்களாதேஷின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாலும்,
தொடர்ந்து  நாடானது சீனாவிலிருந்து விமானங்களை அனுமதிப்பதாலும்,
பங்களாதேஷ் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

கத்தோலிக்க நலப்பணியாளர்கள் பங்களாதேஷின்  அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த பயத்தை ஒழிக்கும் பணியில் அதி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கின்றனர்.

பங்களாதேஷ் கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்து இயக்கங்களும் உறுப்பினர்களும் இதில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் லூர்து அன்னையின் விழாவை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நோயாளிகளுக்கும் நல்ல பணியாளர்களுக்கும் ஜெபத்தை உரித்தாக்கி இருக்கின்றார்.

 

Add new comment

1 + 0 =

Please wait while the page is loading