எவரஸ்ட் சிகரம் தொட்ட மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு கௌரவம்

உலகிலேயே மிகவும் உயரமான எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு இங்கிலாந்து முனைவர் பட்டமளித்து கௌரவித்துள்ளது.

 

கடந்த 2013ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரம் மீது ஏறி, மாற்றுத்திறனாளியான இந்திய வீராங்கனை அருணிமா சின்ஹா சாதித்தார்.

 

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் முதல் மாற்றுத் திறனாளி என்ற பெருமையையும் தட்டிச்சென்றார். .

 

கூடைப்பந்து விளையாட்டு தேசிய வீராங்கனையாக இருந்த இவர், தொடர் வண்டியில் பயணித்தபோது கொள்ளையர்கள் கீழே தள்ளி விடட்டதால் இடது காலை இழந்தார்.

 

ஆனால், வீட்டில் முடங்கிக் கிடக்காமல் சாதிக்கத் துடித்த அவர், எவரஸ்ட் சிகரத்தில் ஏற்றுவதற்கு ஊக்கம் பெற்று சாதித்தும் காட்டினார்.

 

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள மிகப்பெரிய மலைகளில் ஏறி பல்வேறு சாதனைகளை சொந்தமாக்கியுள்ளார்.  

 

2015ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி இந்தியா கௌரவித்துள்ள நிலையில், இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைகழகத்தின் கௌரவ முனைவர் பட்டத்தை இப்போது இவர் பெற்றுள்ளார்.

Add new comment

2 + 0 =

Please wait while the page is loading