ஊழல்களின் தலைவர்  நரேந்திர மோடி – மம்தா

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஊழல்களின் தலைவர் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 

 

வியாழக்கிழமை கொல்கத்தாவில் தொடங்கிய உலக முதலீட்டாளர் மாநாடு வெள்ளி மாலை நிறைவு பெற்றது. மாநாடு நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

 

கோத்ரா மற்றும் பிற மோதல் சம்பவங்களின் வழியாக வந்தவர்தான் தலைமையமைச்சர் மோடி. 'சாய்வாலா' வாக பார்க்கப்பட்ட இவர் தற்போது 'ரஃபேல் வாலா' வாக உள்ளார்.

 

மோடி ரபேலின் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாஸ்டர். இவ்வாறு அவர் மொத்தமாக 'ஊழல்களின் மாஸ்டராக' விளங்குகிறார் என்று மம்தா கூறியுள்ளார்.

இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து திட்டமிட்டு பணியாற்றுவதால் தலைமையமைச்சர் மோடி பயப்படுகிறார். நாங்கள் பிரதமர் பதவியைதான் மதிக்கிறோம்; மோடியை அல்ல.என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Add new comment

14 + 0 =

Please wait while the page is loading