உங்கள் மகிழ்ச்சி  இரட்டிப்பாக வேண்டுமானால்....

கிறிஸ்துமஸ் காலத்தில் உங்கள் மகிழ்ச்சி 
இரட்டிப்பாக வேண்டுமானால்....

இயேசு பிறப்பின் காலம் திகைக்க வைக்கும் ஆச்சரியத்தை அவரைப் பார்த்த, கேட்ட, அனைவருக்கும் கொண்டுவந்தது. இந்த திகைக்க வைக்கும் ஆச்சரியத்;தை நாம் யாருக்கு கொடுக்கப்போகிறோம்.

கலிபோர்னியாவைச் சார்ந்த எரிக் என்பவர் தீயணைப்பு வீரராகப் பணியாற்றுகிறார். அவர் ஆசைப்பட்டு செய்யும் வேலை இது. யோசமைட் என்ற இடத்தில் தீ விபத்து மீட்புப் பணியில் இருந்தபோது, இவர் வீடும் தனியாக ஏற்பட்ட தீவிபத்தில் சாம்பலானது. 

அவருடைய மனைவி அங்கிருந்து தப்பித்துவிட்டால், ஆனால் அவர்கள் 2015 ஆம் ஆண்டு கடினப்பட்டு வாங்கிய கனவு இல்லம், ஒன்றுமில்லாமல்போனது.

தீவிபத்திலிருந்து மற்றவர்களையும், அவர்கள் வீடுகளையும் பாதுகாக்கமுடிந்த இவரால், தன்னுடைய சொந்த வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை. மீண்டும் இப்படிப்பட்ட இல்லம் வாங்குவதற்கு ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், நண்பர்களால் 12203 டாலர் பணம் உதவியாகப் பொற்றார்கள்.

பின்னர் இலன் நிகழ்ச்சி வழியாக, இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உதவி 12203 டாலிரிருந்து  50000 டலாராக உயர்ந்தது. அதை அவர்களால் நம்பமுடியவில்லை. 

இந்த நிகழ்ச்சியின் வழியாக பல்வேறு தகுதியுள்ள, சமூகத்தால் அக்கறைப்படாத மனிதர்கள் அவர்களால் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு உதவிகள் பெற்றுவருகிறார்கள். 

அதில் பயன்பெறுபவர்களின் வாழ்வைப் பார்க்கிறபோது, அவர்கள் பிறருக்குச் செய்யும் உதவிக்கும் நல்மனத்துக்கும் கொடுக்கப்படும் பரிசே என அறிதியிட்டு;க் கூறலாம்.

இந்த கிறிஸ்துபிறப்பு காலத்தில் நீங்கள் தேவையில் இருப்பவர்களை அதிசயவிக்க விதத்தில் மகிழ்ச்சிப்படுத்துங்கள், உங்களுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பபேத இயேசு பாலகனின் செய்தி.

யாரை மகிழ்ச்சிப்படுத்தப்போகிறீர்கள், உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க?

இந்த உங்கள் முயற்சி எதுவும் முடிவுறவில்லை. கடவுள் எல்லாவற்றையும் நடத்திக்காட்டுவார். இப்பொழுது உள்ளதுபோல எப்பொழுதும் உணரலாம் என்ற நம்பிக்கையை எல்லாருக்கும் கொடுக்கும்.

Add new comment

12 + 1 =

Please wait while the page is loading