இன்று இதுதான் தேவை

Prayer at dawn

அதற்கு அவர், “என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?” என, அவர், “அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்” என்றார்.⒫

தொடக்க நூல் 18-32.

ஆண்டவரே எங்களை மன்னியும். நாங்கள் பாவம் செய்தோம். மனம் நோக செய்தோம். உம்மை நினையாது தூரம் போனோம் அப்பா. எங்களை மன்னியும் . இந்த ஒரு முறை மன்னியும். இந்த உலகிலுள்ள அனைவரையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்  அப்பா. ஆண்டவரே உம் கண்களில் பத்து நீதிமான்கள் கூடவா படவில்லை.  அந்த பத்து நீதிமான்களின் பொருட்டு எங்களை மன்னியும் ஆண்டவரே. ஆண்டவரே ஒரு உயிர் கூட அழியாதபடி காத்தருளும்.  நோய்க்குரிய அந்த கிருமி முற்றிலும் அழிந்து போகட்டும் ஆண்டவரே. பூமியிலிருந்து நோய்களை உருவாக்கும் அந்த வைரஸை அழித்து விடும்.அனைவரும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப செய்யும் ஆண்டவரே. ஆசீர்வதியும். 

பொறுத்தருளும் கர்த்தாவே உமது ஜனத்தின் பாவங்களை பொருத்தருளும். என்றென்றைக்கும் எங்கள் மேல் கோபமாயிராதேயும் சுவாமி.

 ஆண்டவரே எங்களை மன்னியும். கொடிய நோயால் வருந்தும் அனைவருக்கும் பூரண சுகத்தை கொடும் .  தனிமை படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் உமது பிரசன்னத்தை கொடும்.  பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட அனைவருக்கும் உமது பலத்தையும் அரவணைபையும் கொடும். இந்த சமயத்தில் எங்களுக்கு உதவி செய்து எங்களை வழி நடத்தும் அரசை சார்ந்தவர்கள், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் , தொண்டார்வ நிறுவனத்தார் அனைவருக்கும் ஏற்ற ஞானம் , அறிவு, உடல் சுகம் கொடுத்து காத்தருளும். உமது தூய இரத்தத்தால் எங்களுக்கு விடுதலை தாரும். உமது பாஸ்கா விழாவின் போது நாங்கள் இந்த பாடுகளிருந்து கடந்து செல்ல அருள் தாரும் ஆமென்.

Add new comment

9 + 8 =

Please wait while the page is loading