ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி- வழிநடத்தும் தமிழ் ஆராய்ச்சியாளர்

Lab photography

 கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

இன்றைய தகவல்படி ஆஸ்திரேலியாவில் Queensland இல் 5 பேரும், New South Wales இல் 4 பேரும், Victoria வில்  4 பேரும், South Australia வில் 2 பேரும்  பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 5 பேர் ஆரம்ப நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். 

இந்நிலையில்,  ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் குழுவை இந்திய வம்சாவளி தமிழர் வழிநத்துவதாக தகவல்கள் வந்துள்ளன. இக்குழு தனது முதல் ஆய்வில் வெற்றியும் பெற்றுள்ளது என்பது சிறப்பு.

அவரது பெயர் ஸ் எஸ் எஸ் வாசன் என தெரியவந்துள்ளது.
எஸ்.எஸ்.வசன் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் அறிஞர் ஆவார். அவர் பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி) மற்றும் பிலானா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார். கொரோனா வைரஸுக்கு முன்பு ஜிகா வைரஸ், டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

Add new comment

4 + 0 =

Please wait while the page is loading