கடைசியில கடவுள்ட்டதான் போகணும் ராசா!

pixabay

க்ராண்ட் டீப்  என்னும் பேலோர் பல்கலைகழகத்தின் கால்பந்து பயிற்சியாளர் நான் நம்புகிறேன்  என்னும் தன்னுடைய புத்தகத்தில் 1963-இல் போல் வால்ட் விளையாட்டில் உலக சாம்பியனாக திகழ்ந்த பிரையான் ஸ்டெர்ன்பர்க் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். 1968-இல் தடகள வீரர்களின் பயிற்சியாளர்களுக்கான கூட்டம் கொலராடோ நகரில் நடைபெற்றது. அப்பொழுது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் முழுவதும் இருட்டாக இருந்தது. அப்பொழுது ஸ்டெர்ன்பர்க் உலக சாதனை படைத்த நிகழ்வை மிகவும் சிறப்பான விதத்தில் திரையிட்டனர். 

சில வினாடிகளில் சிறப்புமிக்க கால்பந்து வீரர் வெஸ் வில்மர் தனது கைகளில் ஒரு முடக்கப்பட்ட மனிதனை ஏந்தி வந்து மேடையில் இருந்த சக்கர நாற்காலியில் அமர்த்தினார். மேடை முழுவதும் வெளிச்சமானது. சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தது வேறு யாருமில்லை பிரையான் ஸ்டெர்ன்பர்க்தான் என்பதைக் கண்ட அனைவரும் திகைத்துப்போயினர். 

பின்னர் தடித்த குரலில் அவர் பேசினார். என் நண்பர்களே! எனக்கு நடந்தது உங்களில் யாருக்கும் நடக்கக்கூடாது என்று கடவுளிடம் நான் செபிக்கின்றேன். மனிதன் தானாய் செய்யக்கூடிய ஒரு செயலைக்ககூட செய்யமுடியாததால் வரும் மனக்குணிவையும் அவமானமும் உங்களுக்கு தெரியவே கூடாது என வேண்டிக்கொள்கின்றேன். எனக்கு நடந்தது உங்களுக்கு நடக்காது என நம்புகின்றேன், ஆனால் நண்பர்களே இதுதான் கடவுளை உங்கள் வாழ்வின் மையமாக்கும் என முடித்தார். அவருடைய வார்த்தைகள் அனைவரின் உடலிலும் மின்சாரம் பாய்ச்சியதுபோல இருந்தது. அங்கு வந்த அனைவரின் வாழ்விலும் அது ஒரு புது அத்தியாயம், வாழ்வு.

ஆம் எப்பொழுது கடவுள் நம் வாழ்வின் மையமாக மாறுகின்றாரோ அப்பொழுதுதான் வாழ்வின் நிறைவை நாம் கண்டுகொள்ள முடியும். நம் வாழ்வின் முயற்சிகள் முடிவுகள் அனைத்தும் நம்மை கடவுளுக்கு நெருக்கமாக கொண்டுவருகின்றதா, கடவுள் நம் வாழ்வின் மையமாக இருக்கின்றாரா என்பதுதான் நாம் சிந்திக்கவேண்டியது. 

நாம் அர்த்தமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர்களாக மாற வேண்டும். விவிலியத்தில் நாம் பார்க்கின்றோம். யோவாக்கிம் அரசனின் அத்தனை ஆண்டுகள் சிறப்பாக குறி;ப்பிடப்படவில்லை, ஆனால் அவருக்கு கடவுள் கடனாகக் கொடுத்த 15 ஆண்டுகள் சிறப்பானதாக அமைந்தது. இப்படியாக இறைவாக்கினர்கள், அரசர்கள், நீதித்தலைவர்களின் வாழ்வு என்பது அவர்களுடைய பிறப்பிலிருந்து கண்க்கிடப்படவில்லை. ஏன் இயேசுவின் பணி வாழ்வைத்தான் நற்செய்தியாளர்கள் தொடங்கி அனைவரும் எடுத்தியம்புகின்றனர், மாறாக எப்பொழுது கடவுளை மையப்படுத்தி, பிறருக்காக வாழ ஆரம்பித்தார்களோ அவைதான் சிறப்பாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அப்படியென்றால் எப்பொழுது கடவுளை மையப்படுத்தி, பிறருக்காக வாழ ஆரம்பிக்கின்றோமோ. அப்பொழுதுதான் வாழ்வு தொடங்குகின்றது.
 

Add new comment

4 + 15 =

Please wait while the page is loading