தலைவா! - தேடிக்கிடைக்காதப் புதையல் (Treasure-Hunting) 4

Dr. Joe Arun on Leadership

தேடிக்கிடைக்காதப் புதையல் (Treasure-Hunting) 4: தலைவா!

தலைவர்கள் இன்று இல்லை. இந்த உலகில் இன்று யார் தலைவர் என்று யாரால் சொல்லமுடியும். இளைஞர்கள் மாறினால் தலைவர்கள் உருவாகலாம். ஒரு இளைஞன் நினைத்தால் அவற்றை செய்து காண்பிக்கமுடியும். ஒவ்வொரு இளைஞனும் நல்லா படிக்கணும், நல்ல சம்பாதிக்கணும், நல்ல பொருள்சேர்த்து வாழவேண்டும். பொருள் மையமாகவே அவர்களுடைய வாழ்வு சுழல்கிறது. 

தன்னைத் தாண்டி சமூகத்திற்காக வாழவேண்டும் என்ற மனநகர்வு, சிந்தனை நகர்வு இருக்கிறவர்கள் தலைவர்களாகிறார்கள். தன்னைத்தாண்டி இந்த உலகத்திற்கு என்னசெய்யப்போகிறேன் என்று சிந்திப்பவர்கள்தான் தலைவர்கள். தன்னுடைய சுயத்தைத் தாண்டி சிந்திப்பவர்கள்தான் தலைவர்கள்.  

இன்றைய இளைஞர்கள் அலைபேசிக்குள்ளே வாழ்கிறார்கள். அவர்களிடம் சமூகத்தை நோக்கிய புரட்சியான கருத்துகள் அனைத்தும் மழுங்கிப்போய்விட்டது. அவர்களுக்கான இலக்கைப் பற்றி தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் நம்மைத்தாண்டி பிறருக்காக சில மணிநேரம் செலவழிக்கிறவர்கள்தான் தலைவராக முடியும். நம்மை தாண்டி மற்றவர்களைப் பற்றி யோசித்து, அவர்களுக்காக வாழகிறவன் தலைவனாகிறான்.

என் சுவடுகளை இவ்வுலகில் விட்டுச்செல்லவேண்டும் என்று விரும்பினால், நம்மை சுத்திகரிக்கவேண்டும். நம்மால் இவ்வுலகிற்கு எதைக் கொடுக்கமுடியும் எனச் சிந்தியுங்கள்.

தொடர்பில் கொடுக்கப்பட்ட காணொளிக்காட்சியின் சுருக்கம்

தொடர்ந்து இந்த செய்தியைப் பார்க்க எங்கள் சேனலுக்கும், இணையதளத்துக்கும் வாங்க...... Veritastamil

Add new comment

7 + 5 =

Please wait while the page is loading