சிகரம், ஒரு மூங்கில் மரம்...13: தடைகளைக் கண்டறியுங்கள், தகர்த்தெறியுங்கள்

  சிகரம், ஒரு மூங்கில் மரம்...13: தடைகளைக் கண்டறியுங்கள், தகர்த்தெறியுங்கள்

நாம் இன்று இருக்கும் இடத்திற்கும் நம் இலக்கிற்கும் இடையேயுள்ள இடைவெளி என்ன என்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். நம்மை இலக்கை அடையவிடாமல் தடுப்பது எது? எது நம்முடைய இலக்கை அடைவதற்கான வேகத்தை முடிவுசெய்கிறது? எவ்வளவு வேகமாக நாம்; இப்பொழுது இருக்கும் இடத்திலிருந்து இலக்கை அடையலாம்  என்பதை எது நிர்ணயம் செய்கிறது? இலக்கை அடைவதில் வித்யசத்தைக் கொண்டுவரக்கூடியது எது? ஏன் இன்னும் உங்கள் இலக்கை நீங்கள் அடைவில்லை? 

நாம் என்ன செய்தாலும் அவற்றை கட்டுப்படுத்தும் ஒன்று இருக்கத்தான் செய்யும். நாம் அவற்றைக் கண்டுபிடித்து, அவற்றை நீக்குவதற்கு நம்முடைய முழு சக்தியையும் அதிலே பயன்படுத்தவேண்டும். அந்த தேக்கநிலை, கட்டுப்படுத்துவது ஒரு மனிதராகவோ, நம்முடைய நிறுவனத்தின் மூல ஆதாரமாகவோ, எதாவது ஒரு பரிவின் அல்லது குழுவின் பலவீனமாகவோ இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம்.

ஒரு நிறுவனம் அதன் வளர்ச்சியை வீழ்ச்சியை பல நிலைகளிலிருந்து பார்க்கவேண்டும். அதே போலதான் படிக்கிற மாணவர்களும் தங்கள் தடைகளை எல்லா நிலையிலிருந்தும் பார்க்கவேண்டும். நாம் எதிலாவது கவனம் செலுத்தி, எதையாவது ஒரு பொருட்டாகக் கருதாமல் இருந்தால் அதில் நமக்குப் பின்னடைவைத் தரும்.

பொதுவாக 80ஃ20 விதியை இதற்குப் பயன்படுத்தலாம். 80 சதவீதமான தேக்கநிலை, வீழ்ச்சி நமக்குள்ளேயே இருக்கிறது. நம்முடைய குணத்தில் பண்பில் மனப்பாண்மையில் உள்ளது. 20 சதவீதம்தான் வெளியிலிருந்து வந்து நம்மைப் பாதிக்கிறது. 

வெற்றியாளர்கள் பொதுவாக கேட்கும் கேள்வி இதுதான் என்னில் இருக்கும் எந்த விடயம் என்னை முன்னேறி செல்லவிடாமல் தடுக்கிறது? அதே வேளையில் எந்த விடயம் நான் இலக்கை சரியான நேரத்தில் அடைவதற்கான வேகத்தை துரிதப்படுத்துகிறது?

Add new comment

3 + 1 =

Please wait while the page is loading