சிகரம், ஒரு மூங்கில் மரம் 20: சரி நம்ம வேலையைப் பார்ப்போம்

சிகரம், ஒரு மூங்கில் மரம் 20: சரி நம்ம வேலையைப் பார்ப்போம்

சரி வேலையைப் பார்ப்போம் என்ற சொல் எப்பொழுதும் நம்முடைய தாரக மந்திரமாக இருக்கவேண்டும். புறணிபேசுறது, விளையாடுறது, படம் பார்க்குறது, நண்பர்களோடு உரையாடுவது எல்லாம் இருக்கும். ஆனால் ஒன்றித்த மனநிலையில் நம்முடைய வேலைகளைத் தொடரவேண்டும். ஒரு வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலையைத் தொடர்ந்தோம் என்றால் நமக்கு அதே நிலையில் தொடர்வதற்கு 500 சதவீதம் அதிகமான நேரமும், சக்தியும் தேவைப்படும்.  

எல்லாவற்றையும் நல்ல தயாரிப்புடன் தொடங்கவேண்டும். இடையில் அது வேண்டும் இது வேண்டும் என்று வேலைசெய்பவர்களும் கேட்கக்கூடாது, கூட இருப்பவர்களும் சொல்லக்கூடாது. 
ஒரு வேலையைத் தொடங்கிவிட்டு இன்னொரு வேலையில் நுழைந்தால் அது நம்முடைய நேரத்தை விரயம் செய்யும்.

எப்பொழுதும் நம்முடைய திறன்மேலாண்மை வளைவரைவு என்று சொல்லக்கூடியவற்றில் சரியான மேல்நோக்கி இருக்கவேண்டும் (நுககiஉநைnஉல ஊரசஎந). முதன்மைப்படுத்தப்பட்ட செயல்களைச் செய்வதற்கு முனைப்புடன் செயல்படவேண்டும்.

இலக்கை நோக்கியப் பயணத்தில் இரண்டு விடயங்கள் அவசியம் என்று எல்பர்ட் கியூபர் கூறுகிறார். ஒன்று, சுய ஒழுக்கம் - நம்முடைய விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி நாம் எதைச் செய்யவேண்டும், எப்படிச்செய்யவேண்டும், அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதற்கான திறன் கொடுப்பது. 

இரண்டாவது, விடாமுயற்சி – சுய ஒழுக்கத்தின் செயல்வடிவம். நீங்கள் இவ்வாறு செய்தால் உங்களையே உங்களுக்குப் பிடிக்கும். உங்கள் பண்புநலன் மேம்படும்.
 

Add new comment

9 + 5 =

Please wait while the page is loading