சிகரம், ஒரு மூங்கில் மரம் 19: வேலையை நிறைவுசெய்ய நிர்பந்தியுங்கள்

சிகரம், ஒரு மூங்கில் மரம் 19: வேலையை நிறைவுசெய்ய நிர்பந்தியுங்கள்

ஒரு பெரிய வேலையை எப்படி பிரித்து செய்வது என்பதனை விளக்கும் முறையை ஆங்கிலத்தில் சலாமி ஸ்லைசஸ் முறை. அதாவது ஒரு முழுப் பொருள் துண்டு துண்டுகளாக வெட்டப்படுவதுபோல நம்முடைய வேலையையும் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்தல் மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால் அனைத்தையும் சப்பிட்டாகவேண்டும். அதாவது ஆப்பிள் பழத்தை துண்டுகளாக வெட்டிவைத்து, அவற்றை ஒவ்வொன்றாக சாப்பிட வேண்டும் ஒன்றையும் மீதம் வைத்துவிடக்கூடாது, வைத்தால் கெட்டுவிடும் அப்படிதான் வாழ்க்கையும் கெட்டுவிடும். 

பொதுவாக நாம் தொடங்கிய வேலையை முடிக்கவேண்டுமென்ற ஒரு நிர்பந்தம், வலியுறுத்தல் நம் உள்ளத்தில் இருந்துகொண்டே இருக்கும். எனவே நாம் அந்த வேலையை ஒவ்வொரு சிறு சிறு பகுதியாக செய்கின்றபோதும், ஒவ்வொரு பகுதியையும் முடிக்கும்போதும் நமக்கு அடுத்த பகுதியைத் தொடங்குவதற்கு ஒரு உந்துசக்தி கிடைக்கும். அதாவது நம்முடைய மூளையின் என்டோபிரின்ஸ் தூண்டப்படும். கடைசியாக எவ்வளவு பெரிய வேலையை நாம் முடிக்கிறோமோ, அவ்வளவு மகிழ்ச்சி அடைவோம். 

நம்முடைய வேலையில் நம்முடைய நேரத்தை எப்படி கணக்கிட்டு செயல்படுவது என்பதற்கு சுவிஸ் சீஸ் முறையைப் பயன்படுத்தலாம். ஒரு வேலையின் காலஅளவை நிர்ணயிக்கவேண்டும். அந்த வேலையை 10 நிமிடங்களாக பிரிக்கவேண்டும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு சிறிய இடைவெளிவிட வேண்டும். ஆனால் அந்த முழுவேலையையும் முடித்துவிடவேண்டும். பெரிய எழுத்தாளர்கள் இம்முறைகளைப் பின்பற்றி ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்று எழுதி ஒரு புத்தகத்தை முடித்துவிடுவார்கள். பின்னர் மற்ற வேலைகளைச் செய்கிறார்கள். நம்முடைய வேலைகள் கடினமாகவோ பெரியதாகவோ தெரிகின்றபோது இந்த முறையைப் பயன்படுத்தலாம்.  
 

Add new comment

3 + 7 =

Please wait while the page is loading