சிகரம், ஒரு மூங்கில் மரம் 12: தொடர் கற்றல் குறைந்தபட்ச தேவை

சிகரம், ஒரு மூங்கில் மரம் 12: தொடர் கற்றல் குறைந்தபட்ச தேவை

பேட் ரெய்லி என்ற கூடைப்பந்து பயிற்சியாளர் கூறுகிறார்: ஒவ்வொரு முறையும் நம்மை மேம்படுத்துவதை நிறுத்துகிறபோது, தானாகவே, நாம் நம்மை மோசமான நிலைக்கு கொண்டுவருகிறோம்.

நாம் புதியதாக கற்றுக்கொண்ட, வளர்த்துக்கொண்ட திறமை நமக்கு நம்முடைய வேலையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

வெற்றியை நோக்கியப் பயணத்தில் தொடர் கற்றல் என்பது மிகவும் அடிப்படையான குறைந்தபட்ச அவசியத் தேவையாகும். ஒவ்வொரு முறையும் புதியனக் கற்றுக்கொள்வது கடினமான விசயம் அல்ல. அப்படித் தோன்றினால் அப்பொழுது யார் யாரோ எந்த வயதிலோ புதியனக் கற்றுக்கொள்கிறார்கள். அப்படியிருக்க ஏன் என்னால் முடியாது என நினைத்துக் கொள்ளுங்கள். 

தொடர் கற்றலுக்கு ஒரு சிறிய வழிகாட்டுதல்:
1.    நீங்கள் பயணிக்கும் இலக்கு தொடர்பானவற்றை ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் வாசிக்க வேண்டும்.
2.    அதற்கு தேவையான வகுப்புகள், பயிற்சிகள் போன்றவற்றைக் கண்டறிந்து, அதிலிருந்து தேவையானவற்றைப் பெற்று உங்களுடைய துறையில் நல்ல அறிவும், திறமையும், பெற்றவராக மாறவேண்டும்.
3.    நீங்கள் பயணம் செய்கின்றபோது, மற்ற வேலைகளில் பயிற்சியாளர்களின் பேச்சினையும், கருத்துக்களையும் அலைபேசி வழியாக கேட்க்கலாம். ஏனென்றால் நாம் ஆண்டிற்கு குறைந்தது 500 முதல் 1000 மணிவரைப் பயணிக்கிறோம். 

 

Add new comment

8 + 3 =

Please wait while the page is loading