எல்லாமே மாறும், இது இருந்தால்!

Dr. Joe Arun Sj on Habit and Change after pandemic

எல்லாமே மாறும், இது இருந்தால்!

முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்கள் மானுடவியலாளர். உலகெங்கும் சென்று பலருக்கும் வெற்றிகரமான வாழ்விற்கான சூத்திரத்தைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய காணொளி பகிர்வின் சுருக்கம்.  

கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின்பு நம்முடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறிவிடும். புதிய பழக்கத்திற்கு நம்மை உள்ளாக்கிக் கொள்ளவேண்டும். அப்படிப் புதிய பழக்கத்திற்கு நம்மை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நம் உயிரை இழந்துவிடுவோம் என்கிறார்கள். அப்படிப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது என்பது புதிய வாழ்விற்கு இட்டுச் செல்லும் வழி என்பதைப் புரிந்துகொள்கிறோம். 

ஏனென்றால் பழக்கம் என்பது நம்மை உருவாக்குவது, நம்மை மனிதனாக மாற்றுவது. ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்கிறபோது அது பழக்கமாக மாறுகிறது. ஒரு சமூகமே சமூகமாக மாறுவதற்கு காரணம் அவர்கள் வழக்கமாகச் செய்யும் பழக்கங்கள்தான். ஒரு பண்பாடு என்பது பழக்கங்களின் குவியல்கள் என்கிறார்கள். மனிதன் என்பவன் Bundle of Habits. பழக்கங்களின் குவில்கள். What you are is What you repeatedly do. ஒருவர் பாடகராக மாறவேண்டும் என்றால் திரும்பத் திரும்பப் பாடுகின்றபோது பாடகர் ஆகிறார்.

இதுவரை இருந்த பழக்கங்கள் எல்லாம் கொரோனா வைரஸ்க்குப் பிறகு மாறிவிடுகின்றது. ஒரு குழந்தையை ஒரு கூண்டுக்குள் அடைத்துப் பத்து வருடம் வைத்துவிட்டு உணவுமட்டும் கொடுங்கள் அது புழுப்போல மாறிவிடும். வாய்மட்டும்தான் வேலை செய்யும், புழுவாக மாறுகிறோம். நாம் குழந்தையாக பிறந்து மனிதனாக உருவாக்கப்படுகிறோம். இதைத்தான் ஸ்கின்னர் தனது ஆராய்ச்சியின் முடிவில் கூறுகிறார்.

கொரோனா வைரஸ்க்கு பிறகு சமூக இடைவெளியினால் நம்முடைய கூடிவாழும் வாழ்வு சிதைகின்றது. மனிதனுடைய வாழ்வுக்கும் மற்ற மனிதனுடைய வாழ்வுக்கும் இடையே இடைவெளி பெருகுகிறது. இனி திருமணத்தில் தம்பதியர்களை நெருக்கமாக உட்காரச் சொல்லமுடியாது. பேருந்தில் கணவனும் மனைவியும் சாய்ந்து அமர்ந்துகொள்ளமுடியாது. தியேட்டருக்கோ, பீச்சுக்கோ செல்லமுடியாது. ஆக ளஇவற்றை நமது வீட்டிற்குள்ளே கொண்டுவரும் பழக்கத்தைக் கொண்டுவரவேண்டும். மொபைலில் நேரம் செலவழிப்பதை மாற்றவேண்டும். மற்றவர்களோடு பேச வேண்டும். ஏனென்றால் அனைவரும் நம் அருகில்தான் அமர்ந்திருப்பார்கள். 

நம்முடைய பல பழக்கங்கள் மாறியிருக்கின்றது. புகைபிடிப்பவர்கள், குடிப்பவர்கள் பலரும் மாறியிருக்கிறார்கள். ஒரு பழக்கம் மாறுவதற்கு அடிப்படைக் காரணம் பயம்தான். எப்படி என்றால் சிகரெட் பாக்கெட்டில் உள்ள புற்றுநோய்க்கான கொடூரமானப் படம் பலருக்கும் பயத்தை உருவாக்கியிருக்கின்றது. அதேபோல கொரோனா தெற்றினால் நாம் உயிர் இழந்துவிடுவோமோ என்ற பயம் வருகின்றபோது, நம்முடைய பழக்கங்களை மாற்றிக்கொள்கிறோம். எப்பொழுதும் Sickness will change the life என்று சொல்வார்கள். After sickness we see the new world. நம்முடைய பழக்கங்கள் எல்லாம் மாறிவிடும். ஆலயங்களில், பொது இடங்களில் அதிக நேரம் ஒன்றாக செலவழிக்கமுடியாது. எனவே வீட்டிலே அதிக நேரம் செலவழிக்கும் நிலைவந்துவிடும். 

கொரோனா நோய்க்கு பிறகுவரும் புதிய பழக்கங்கள் நிறைந்த புதிய வாழ்க்கை இயற்கையோடு இயைந்ததாக இருக்கும். சத்தாண உணவுகளை உண்ணும் வாழ்க்கையாக மாறும். சுத்தம் சுகம் தரும் வாழ்க்கையாக மாறிவிடும். உறவும், சமூகமும் ஆரோக்கியமானதாக மாறிவிடும். எல்லாவற்றையும் சுத்தமாகப் பார்ப்போம். குடும்பமாக இணைவோம். மீண்டும் புதிய மனிதம் கொரோனாவிற்கு பின்பு வரும். 

எல்லா தொற்றும் இப்படிப்பட்ட புதிய வாழ்வைத் தந்திருக்கிறது. நெருப்பு வாழ்வை மாற்றியது, விவசாயம் வாழ்வை மாற்றியது, தொழில்புரட்சி வாழ்வை மாற்றியது, இப்பொழுது கொரோனா தொற்றுநோய் நம்முடைய வாழ்வை மாற்றும். இந்த மாற்றம் தொழில் நுட்பத்தை மையமாக வைத்து இருக்கும். சாதாரணமாக முடிவெட்டுபவர் கைகளை வைத்து வெட்டாமல், டிரோனை வைத்து வெட்டும் நிலைவரும். எல்லாம் மாறும். மனிதன் மாறுவான். மனித வாழ்வியலும் மாறும்.   

மனிதனின் இயல்புகளையும், வாழ்வியலையும் காலத்திற்கு ஏற்றார்போல கற்றுத்தேர்ந்து, வரவிருப்பதை முன்னிறுத்தி, மாற்றங்களுக்கு மக்களைத் தயாரிப்பதில் பக்குவம் பெற்றவர் முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்கள்.

பழக்க வழக்கங்கள் அடிப்படையில் மாற்றங்களை முன்னிறுத்தும் இந்தப் பகிர்வை பார்த்துப் பயன்பெறுங்கள். பிறருடனும் பகிருங்கள். வாழ்வீர்கள். #veritastamil #rvapastoralcare

Facebook: http://youtube.com/VeritasTamil

Twitter: http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website: http://www.RadioVeritasTamil.org

Blog: http://tamil.rvasia.org

**for non-commercial use only**

 

Add new comment

1 + 0 =

Please wait while the page is loading