அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

prayer at dawn. pray with nature

நன்றி ஆண்டவரே. நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி.  உமக்கு நன்றி.

 அதிகாலையில் அத்தனை படைப்புகளும்  உற்சாகத்தோடு உம்மை புகழும் போது அடியேன் என்னையும் எழுப்பி உம் பிரசன்னத்தை உணர செய்ததற்காக நன்றி.

நீர் எனக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நன்றி.   உணவு , உடை, உறைவிடம், உறவுகள் என எல்லாவறறிலும் உமது அன்பை நான் சுவைப்பதற்காக  நன்றி ஆண்டவரே.

ஆண்டவரே இந்த நாளின் ஒவ்வொரு  மணித்துளிகளும் எங்களோடு இருந்து எங்களை கரம்பிடித்து வழிநடத்தும் . எங்களுடைய போவதையும் வருவதையும் ஆசீர்வதியும். எங்கள் உழைப்பின் பயனை  நாங்கள் சாப்பிட அருள்தாரும் 

எங்கள் வேலைகளை ஆசீர்வதியும் . நாங்கள் சந்திக்கும், நபர்கள் எங்கள் உறவுகள் , நண்பர்கள், எங்களுக்கு அன்பு காட்டுவோர் , எங்களை வெறுப்போர் அனைவரையும் ஆசீர்வதியும் .

 ஆண்டவரே உமக்கு பிரியமில்லாத காரியங்களை நாங்கள் செய்யாதவாறு எங்களை தடுத்து நிறுத்தும் . உமது உமதுஉன்னதமான  உறைவிடங்களில் எங்களை மறைத்து பாதுகாத்துக்கொள்ளும் .

 எங்கள் நாட்டை வளங்களால் நிரப்பும். நாட்டின் எல்லையில் நிற்கும் வீரர்களையும் அவர்கள் குடும்பங்களையும் பாதுகாத்தருளும்.

ஆண்டவரே இந்த நாள் எங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக  இருக்கச் செய்தருளும்.  உமது பிரசன்னம் எப்பொழுதும் எங்களுக்கு முன்பாக செல்லட்டும்.  நாங்கள் எடுக்கும் புது முயற்சிகள் எங்களுக்கு வாய்க்கப்பண்ணும் . ஆசீர்வதியும். அருள் தாரும். 

Add new comment

13 + 7 =

Please wait while the page is loading