விடியலில் உம்மை

Prayer at dawn

இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.

1 தெசலோனிக்கர் 5-17.

நாம் வேண்டுகிற ஜெபம் கிடைக்க தாமதம் ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து இடைவிடாது ஜெபிக்க வேண்டும். சோர்ந்து போகாமல் ஆண்டவர்கிட்ட கேட்டால் நிச்சயமாக அது நமக்கு கிடைக்கும். இல்லையெனில் அவர் வேறு ஒன்றை அதை விட நல்லதாக தருவார்.

 பார்வையற்றோர் இருவர் இயேசு  அருகிலே கடந்து வருகிறார் என்று  தெரிந்ததும், "தாவீதின் மகனே எனக்கு இரங்கும்" என்று சொல்லி மிகுந்த சத்தமிட்டு சொன்னார்கள். எல்லாரும் அவர்களைஅதட்டினார்கள். ஆனால் அவர்களோ திரும்பத் திரும்ப விடாமல் சத்தமிட்டுக் கொண்டேயிருந்தார்கள்.  இயேசு நின்று அவர்களை அழைத்து.  அவர்கள் மேல் இரக்கம் கொண்டு அவர்களுடைய கண்களைத் தொட்டு பார்வையைக் கொடுத்தார்.

 

பொல்லாதவர்களாகிய நாமே நம் பிள்ளைகளுக்கு நல்லதை செய்ய நினைக்கும்போது இரக்கம் மிகுந்த நம் ஆண்டவர் நமக்கு செய்யாது விடுவாரோ.? 

 

ஜெபம் :. ஆண்டவரே,.இந்த விடியலில் உம்மை தேடி வந்துள்ளோம்.  அப்பா இந்த உலகுக்கே சவாலாக இருக்கும் கொள்ளை நோயை அழித்து எங்களையும் எங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் காத்தருளும். இதற்காக பாடுபடும் அனைத்து பிள்ளைகளையும் அவர்கள் குடும்பங்களையும் ஆசீர்வதியும். பணம், உணவு வேலை இன்றி துன்பப்படும் அனைவரையும் காத்தருளும்.  விடியலுக்காக காத்திருக்கும் எங்கள் மீது , இந்த உலகத்தின் மீது , உம் இரக்க பார்வை  விழச் செய்யும் ஆண்டவரே.  ஆமென்.

 

Add new comment

1 + 5 =

Please wait while the page is loading