உயர்வுக்கு வழி இதோ...

Prayer at dawn

நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்றார்

தொடக்க நூல் 4.7

காயின் நிலத்தின் பலனிலிருந்தும், ஆபேல் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளையும் ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தார்கள்.ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.

ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.

அப்பொழுது சொன்னது தான், இந்த வசனங்கள். 

ஆனால் காயின் அந்த வார்த்தைக்கு கீழ் படியவில்லை.  பாவத்தை மீண்டும் செய்கிறான்.  அபேலை கொன்று விட்டான். எனவே காயீன் பாவத்திற்கு அடிமையாகி இறைவனுடைய சாபத்துக்கு ஆளாகிறான். 

 

அவன் மண்ணில் பயிரிடும் பொழுது பலன் தரவில்லை. மண்ணுலகில் நாடோடியாக அலைந்து திரிந்தார். ஆண்டவரின் திருமுன்னிலை இருந்து தூர போகிறான். ஆண்டவருடைய தண்டனை அவனுக்கு தாங்க முடியாததாக இருந்தது. 

 

பாவம் என்பது பொல்லாதது . நாம் அதை அடக்கி ஆளவேண்டும் .பாவத்தை அடக்கி ஆளும்போது, புனிதமான வாழ்க்கை நமக்காகக் காத்திருக்கிறது. இச்சைக்கு இடம் கொடுத்து மீண்டும் நாம் அந்த பாவத்தை நாடிச் செல்லக் கூடாது. நாம் பாவத்தில் வீழ்ந்து விடும்போது புனித வாழ்க்கையை இழந்து விடுகிறோம்.

 

ஜெபம் : ஆண்டவரே நாங்கள் பவீனர்கள். உம் பலத்தால் , தூய ஆவியால் எங்களை நிரப்பும். பாவத்தை மேற்கொண்டு உம் பிள்ளைகளாக வாழ்ந்து உம் ஆசீர்வாதத்தை நிறைவாக பெற அருள் தாரும்.துணை செய்யும் . ஆமென்

Add new comment

5 + 9 =

Please wait while the page is loading