ஆசீரோடு வாழ

Prayer at dawn

அப்பொழுது ஆடவர் “என்னைப் போகவிடு; பொழுது புலரப்போகிறது” என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று மறுமொழி சொன்னார்.

தொடக்க நூல் 32-26.

நம்மில் சிலர் ஆண்டவருடைய இரக்கத்தின் படி   ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். சிலர்  போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஆண்டவர்  தாமாகவே  வந்து மகிழ்ச்சியோடு தரும் ஆசீர்வாதங்களுமுண்டு. நாம் கேட்கும்போது கொடுப்பதற்கென்று அவர் தன்னிடம் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களுமுண்டு.

யாக்கோபைப் பாருங்கள்!  அவருடைய  உள்ளத்திலோ, ஆண்டவருடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை இருந்தது. 

தன் அண்ணனுக்கு கூழைக் கொடுத்து, தலை மகனுக்குருய உரிமையை பறித்து கொள்கிறார். தந்தையின்ஆசீர்வாதத்தையும் தந்திரமாய் பெற்று கொள்கிறார்.. ஆண்டவர் அவனுக்கு தோன்றியபோது அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, நீர் எனக்கு ஆசீர் வழங்கினாலொழிய உமை போகவிடேன்" என்று சொல்லி, கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார். யாக்கோபு போராடி அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதுபோல நாமும் தினமும் ஜெபிக்க வேண்டும். 

 யார் யார் கடவுளுடைய  ஆசீர்வாதங்களைப் பெறவேண்டும் என்று ஏங்குகிறார்களோ, அவர்களை ஆசீர்வதிக்க ஆண்டவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார். நாம் நினைக்கிறதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாக அவர் செயல்களைசெய்ய வல்லமையுள்ளவராயிருக்கிறார்.  மனம் சோர்ந்துபோகாமல் இடைவிடாது ஜெபிக்க வேண்டும். இயேசுவின் பெயரால் கேட்போம் . பெற்று கொள்வோம்.

ஜெபம் :  அன்பு ஆண்டவரே ,  எங்களுக்கு எது தேவை என நீர் அறிந்திருகிறீர். அன்பு தந்தையே, இந்த நாட்களில் உலகை ஆட்டி படைக்கும், நோய், பசி, வறுமை, பண பற்றாகுறை, பொருளாதார சிதைவு, மனப் போராட்டங்கள், அமைதியின்மை போன்றவற்றிலிருந்து  எல்லா மக்களையும் காத்தருளும். உலக மக்கள், அனைவரும் சமாதானமாக அமைதியாக நிறைந்த ஆசீரோடு வாழ வழி செய்யும்.  ஆமென்.

Add new comment

4 + 0 =

Please wait while the page is loading