அறுவடை காலம்

Prayer at dawn

நன்மைசெய்வதில் மனம்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை செய்வோம்.

கலாத்தியர் 6-9.

 நன்மை செய்வதிலே சோர்ந்து போகக்கூடாது. நன்மை செய்வது என்பது, நிலத்தில் விதை விதைப்பதற்கு ஒப்பாகும். 

நாம் நன்மை செய்யும்போது, பிறரிடமிருந்து  பதிலுதவி எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் நிச்சயமாகவே ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பார். . ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்து விடுவார் என்று நீதிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது.

எலிசாவுக்கு  சூனேமிய பெண் அவ்வழியே உணவு கொடுத்து தங்குவதற்கு மேல் வீட்டை யும் கொடுக்கிறார். அதன்பிறகு ஆண்டவர் அந்த பெண்ணின் குறைவு என்ன என்று எலியா மூலமாக கேட்டு  அவருக்கு  குழந்தை பேற்றை கொடுத்து ஆசீர்வதிக்கிரார்.  

சகோதர சகோதரிகளே! நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம் என்று திருத்தூதர் பவுல் சொல்கிறார்.

 நாம் நன்மை செய்யும் போதெல்லாம் ஆண்டவர்க்கே செய்கிறோம்,  நாம் மன நிறைவோடு நன்மை செய்தால் , கடவுள் நமக்கு இம்மையிலும், மறுமையிலும் நிறைவான மகிழ்ச்சியும் சமாதானமும் தருவார்.

ஜெபம் :. ஆண்டவரே, நன்மைகளின் ஊற்றே, உம்மை துதிக்கிறோம். ஆண்டவரே பிறருக்கு நன்மை செய்யும் நல்ல உள்ளத்தை எங்களுக்கு தாரும். உம்மிடம் இருந்து ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டு அதை பிறருக்கு பகிர்ந்து வாழும் தளராத உள்ளத்தை எங்களுக்கு தாரும். ஆ சீர்வதியும். ஆமென்.

Add new comment

5 + 11 =

Please wait while the page is loading