அசைவுறாது

Prayer at dawn

மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.
எசாயா    54:10. 

மலைகள்  எவ்வளவு உறுதியானவை. அதை யாராவது நகர்த்தி இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியுமா. இல்லை அவைதான் தானே இடம் மாறி செல்லுமா. 

அப்படிப்பட்ட மலைகள் தங்கள் நிலையிலிருந்து மாறலாம்.  குன்றுகள் இடம் விட்டு இடம் நகரலாம்.  

இப்படி நடக்க முடியாதவை எல்லாம் நடந்தாலும் கூட. ஆண்டவர் நம்மீது வைத்துள்ள பேரன்பு கடுகளவும்  மாறாது. சிறிதளவும் அசைவுறாது.

 ஆண்டவர் நமக்கு மாபெரும்  இரக்கம் காட்டுகிற  இறைவன் . 

ஆண்டவர் நம்மோடு செய்துள்ள உடன்படிக்கை ஒரு நாளும் மாறாது. 
அவர் சொன்ன சொல்லில் மாற்றம் எதுவும் இல்லை. 

உன்னை பெரிய இனம் ஆக்குவேன் என்ற உடன்படிக்கையை ஆபிரகாமோடு  அதற்கான அடையாளமே இல்லாத நாட்களில் செய்தார் . உடன்படிக்கையின் படி ஆசீர்வதித்தார். 

திருமுழுக்கின் மூலம் நம்மை தம் சுவீகார பிள்ளைகளாக  அழைத்தவர் பிள்ளைக்குரிய  அனைத்து உரிமையையும் நமக்கு கொடுப்பார்.

ஜெபம் : ஆண்டவரே உம் பேரன்பையும் உமது சத்தியத்தின் உடன் படிக்கையும் உண்மையில் உணர்ந்து மனம் தளராது வாழ வரம் தாரும்.

Add new comment

12 + 8 =

Please wait while the page is loading