சிறப்பு நற்செய்தி மாதம் - இன்றைய இறை சிந்தனை | October 23 | Rev. Fr. Prakash SdC #EMM2019 | Ep-23

சிறப்பு நற்செய்தி அறிவிப்பு மாதம் | October 23 | Rev. Fr. Prakash SdC

இன்றைய முதல் வாசகத்தில் மோசேயின் சட்டம் உபயோகமற்றது என்றும் மனிதரை அடிமையாக்குகிறது, தீர்பிடுகிறது என்றும் கூறுகின்றார் தூய பவுல் அடிகளார்.

 

சட்டம் வந்தது அதனோடு சேர்ந்து பொறுப்புகளும் அதிகமானது, அதனோடு சேர்த்து தவறுகளும் அதிகமானது.

 

இஸ்ரேல் மக்கள் மெசியா வருவார், புதிய சட்டத்தையும் கொடுப்பார், அதுவே 'காலத்தின் நிறைவு' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அது இயேசுவை என்று பவுல் குறிப்பிடுகின்றார்.

 

ஏன் இந்தப் பகுதியை பவுல் எழுதுகிறார் என்றால் ஒரு சிலர் மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டு விருத்தசேதனம் செய்தால் மட்டுமே மீட்பு உண்டு என்கின்றார்.

 

எனவேதான் ஆதாம், மோயீசன், இயேசு என்று ஒற்றுமைகளை வெளிப்படுத்தி, சட்டம் அல்ல இயேசுவின் மீட்பில் பங்கெடுப்பது அதாவது அவருடைய பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு,  இவற்றில் பங்கெடுப்பது நமக்கு மீட்பை தருகிறது என்கிறார்.

 

மீட்கப்பட்ட மக்களாகிய நாம் தொடர்ந்து பழைய இயல்பிலேயே இருந்துவிடக்கூடாது. நம் உடல் உறுப்புகளை பாவத்திற்கு அடிமையாகக் கூடாது.

 

மாறாக நாம் கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்கின்றார்.

 

நாம் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல அருளால் காப்பாற்றப்படுவார்கள்.

 

இதை நாம் அறிவதும் பிறருக்கு அறிவுறுத்தி வழிநடத்துமே திருச்சபையின் மிக முக்கியமான மறைபணி.

 

இதை நாம் செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

இன்றைய நற்செய்தியில் பேதுரு ஒரு கேள்வியை கேட்கின்றார்

 

இது யாருக்கு என்று?

 

இயேசு இவ்வாறாக பதில் சொல்கின்றார். யார் ஒருவரிடம் நிறைய கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கப்படும் என்று.

 

சட்டத்தைப் பற்றியும் மீட்பை பற்றியோ நாம் அறியாதிறந்தாள் நாம் ஒருவேளை மன்னிக்கப்படலாம்.

 

ஆனால் ஆண்டவருடைய பாடுகளும் மீட்பும் நமக்குத் தெரியும். நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகுதியாக கொடுக்கப்பட்டிருக்கின்றது.

 

நாம்  மிகுதியாக கொடுக்க வேண்டும். எனக்கும் பிறருக்கும் கொடுக்க வேண்டும்.

 

இதுவே இன்றைக்கு நம்முடைய மறைப்பணி

Add new comment

16 + 2 =

Please wait while the page is loading